bill gates willing to meet actor amir khan உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பில்கேட்ஸ், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் பில்கேட்ஸ் தன்னுடைய இணையத்தில் கூறியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமீர்கான் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக…
Read Moreஐ பி எல் போட்டியால் அவமானம் தான் வருமானம்: ரணதுங்கா
sri lankan cricketer ranathunga ஐ.பி.எல் தொடரால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் தான் கிடைத்தது என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த வீரர்கள் புக்கிகள் என்று பலர் கைதாகினர். இத்தொடர் குறித்து மக்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையின் ரணதுங்கா கூறுகையில், ஐ.பி.எல் தொடரில் பிக்சிங் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், தொடக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன. இத்தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன், 2008 ம் ஆண்டில் எச்சரித்தார். அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் பெட்டிங், பிக்சிங், போதை என்று ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது. ஐ.பி.எல் தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலக கிரிக்கெட்டுக்குத் தான்…
Read Moreஅல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்பு
al qaeda chemical weapons factory in iraq ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும்…
Read Moreபெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவு
Heavy rain in bangalore பெங்களூரில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவக் காற்று ஜூன் 2-ம் திகதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் மே 30, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. சனிக்கிழமை காலை(ஜூன் 1) எடுக்கப்பட்ட மழை அளவுப்படி, பெங்களூரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. பெங்களூரில் கடந்த 1891-ம் ஆண்டு, ஜூன் 16-ம் திகதி எடுக்கப்பட்ட மழை அளவின்படி, பெங்களூரில் 101.6 மி.மீ மழை பதிவானது. இதுவே பெங்களூரில் ஜூன் மாதங்களில் பெய்த மழையில் அதிக அளவாகும். 122 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை(ஜூன் 1) 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது…
Read Moreதமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு
new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…
Read Moreசென்னை மணலியில் பயங்கர தாக்குதல்: பெண் ரவுடி கை வருசை
Manali gang attack in chennai சென்னையை அடுத்த மணலியில் பெரியார் நகர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே C-Tex நிரவனத்தில் கட்டிட பணி புரிந்த மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர்களால் இலவசமாக கொடுக்கபட்டது. அந்த இடத்தில் தண்டயார் பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று அந்த இடத்தில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொண்டு சில மாதங்களாக வசித்து வருகிறது. அந்த கும்பலுக்கு கோமளவல்லி என்ற பெண் ஒருவர் தலைவியாக செயல்படுகிறார் நேற்று இரவு இந்த கும்பலை சேர்த்த கோமளவல்லியின் சகோதரர் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஜானகி, மற்றும் கோமளவல்லியின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா…
Read Moreபெரிய மார்பகத்தால் கூச்சப்படும் பெண்கள், இயற்கையாய் குறைக்க நிபுணர்கள் வழி
Big Breast Problems மருத்துவ நிபுணர் அறிவுரை: பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது தான். இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன? என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள் மூலமாகவும், மார்பகங்களை சிறிதாக்க முடியும். இவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை மேற்கொள்வதால், சில சமயங்களில் இது வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி, உடல் நலத்தையே கெடுத்துவிடும். எனவே எப்போதும் செயற்கை முறைகளை பின்பற்றுவதற்கு…
Read Moreதுப்பட்டா இல்லாததால் ஆதார் அட்டைக்கு டாட்டா
no Aadhar card photo with out dupatta சென்னையில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க துப்பட்டா போடாமல் வந்த பெண் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஆதார் அட்டைகள் வழங்கும் மையத்திற்கு லாவண்யா மோகன் என்ற பெண் நேற்று சென்றுள்ளார். அவர் துப்பட்டா போடாமல் சென்றதால் அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து லாவண்யா மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்க 1 மணிநேரம் காத்திருந்தேன். ஆனால் நான் துப்பட்டா போடவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். உள்ளூர் அதிகாரிகள் அவர்களாக சில விதிமுறைகளை வைத்துள்ளனர். இதில் கோபப்பட என்ன உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட்டிற்கு பிறகு துப்பட்டா, ஆதார் கார்டு ஆகியவை தான் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகள் ஆகும். இது குறித்து அதிகாரி எம்.ஆர்.வி.…
Read Moreதமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்
Tamilnadu Population 2013 தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டி உள்ளது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழ்நாடு பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ணாராவ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களும், 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர் ஆண்கள், 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் (2001-2011) தமிழகத்தில் மக்கள் தொகை…
Read Moreஎஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்
sslc results exam 2013 தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள…
Read More



