பில்கேட்ஸ் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம்.

bill gates willing to meet actor amir khan

உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான பில்கேட்ஸ், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பில்கேட்ஸ். இந்நிலையில் பில்கேட்ஸ் தன்னுடைய இணையத்தில் கூறியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன்.

யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அமீர்கான் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

bill gates willing to meet actor amir khan

microsoft Company Founder and Major Share Holder Bill Gates is interested to Meet the hindi actor Amir Khan. It is quit interesting to hear such news for all Indians.

Related posts