Odessa Makanati soil decline in coal mining company ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது குல்டா வசுந்தரா என்ற கனிம சுரங்கம். இது மகாநதி சுரங்க பணிகள் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தின் நுழைவு வாயிலின் அருகே, நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, திடீரென சரிந்து விழுந்தது. இதில் 10 பேர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பலியாயினர். மேலும் 30 பேர் வரை மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என,…
Read More ஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.சென்னை, அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரி
Oscar winning A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வெள்ளிக்கிழமை சென்னை, அரும்பாக்கத்தில் துவங்கினார். இசையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இந்த கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி,கோத்தார் குடும்பத்தினர், சுஹாசினி மணிரத்னம், ஒளிப்பதிவாளரும், இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் பரத்பாலா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகன்கள் மற்றும் கே.எம் இசைக் கல்லூரிமாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated
Read More சென்னை, அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரிஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
Sterlite to continue operations புதுடெல்லி, ஆக. 09: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியதால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக 29-ந் தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி சுவதேந்திரகுமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மே 31-ந் தேதி தீர்ப்பாய நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் 4 பேர் கொண்ட குழு ஆலையில் ஆய்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல்…
Read More ஸ்டெர்லைட் ஆலை இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதிபுதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியா மருத்துவமனையில் அனுமதி
Puducherry Lieutenant governor Kataria Puducherry Lieutenant governor Kataria admitted to hospital in Chennai புதுச்சேரி, ஆக. 8- : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த இக்பால் சிங் மாற்றப்பட்டு, புதிய ஆளுநராக வீரேந்திர கட்டாரியா கடந்த மாதம் 10-ம் தேதி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. Puducherry Lieutenant governor Kataria admitted to hospital in Chennai Lieutenant Governor Virendra Kataria was taken to a private hospital in Chennai after he complained of…
Read More புதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியா மருத்துவமனையில் அனுமதிஉலகக் கோப்பை ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
cash reward for Rani Rampal ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தொடர்நாயகியாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். ஜெர்மனியின் மான்செங்லாட்பச் நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்திய அணி வெண்கலம் வென்றதைத் தொடர்ந்து அதில் இடம்பெற்றிருந்த ராணி ராம்பால் உள்ளிட்ட 6 ஹரியாணா வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்தார். இந்த நிலையில் தொடர் நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டதற்காக ராணி ராம்பாலுக்கு மேலும் ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து…
Read More உலகக் கோப்பை ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலுக்கு ரூ.10 லட்சம் பரிசுபுதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்
அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புதிய டைனொசோர் (Dinosaur) இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ட்ரைசெர்ராடாப்ஸ் (Triceratops) பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர் ஐந்து மீட்டர் நீளம் வளரக்கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது. மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இதற்கு இருந்துள்ளது. இந்த ராட்சத விலங்கினம் ஏழரை கோடி ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்திருந்தவை என யூட்டா பல்கலைகலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மிருகத்துக்கு நாசூட்டுசெர்ராடாப்ஸ் டைட்டுசை (Nasutoceratops titusi) என்று பெயரிடப்படுள்ளது. வித்தியாசமான உடல் வாகுடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு மிருகமாக இது இருந்துள்ளது என்றாலும் இது ஒரு தாவர-உண்ணி விலங்குதான்.
Read More புதிய டைனொசோர் இனம் கண்டுபிடிப்பு: அமெரிக்கா ஆய்வாளர்கள்ஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்து
அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார். அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ரஷ்யாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், மாஸ்கோவில் நடக்கும், பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்னோடென்னை ஒப்படைக்காத காரணத்தால் ரஷ்யா பயணத்தை ஒபாமா ரத்து செய்துள்ளார். ஒபாமாவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின்…
Read More ஸ்னொடென்னால் ஒபமாவின் ரஷ்ய பயணம் ரத்துதலைவா அரசியல் படம் அல்ல நடிகர் விஜய் கருத்து
thalaiva film is a commercial movie only its not touch politics. actor vijay தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். ‘தலைவா’ படம் 9-தேதி தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத…
Read More தலைவா அரசியல் படம் அல்ல நடிகர் விஜய் கருத்துசேரன் மகள் தாமினி விவகாரத்தில் அமிரின் அதிரடி தகவல்
சேரன் மகள் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சந்துரு குடும்பம் தொடர்பாக திடுக்கிடும் ஆதாரங்களை காட்டியுள்ளார். சேரனின் நண்பரும் இயக்குனருமான அமீர் ஆரம்பித்திலிருந்தே தாமினி காதல் விவகாரத்தில் சேரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார். இதனால் கோபமடைந்த சந்துருவின் சகோதரி கவுரி, சேரன் மகள் விவகாரத்தில் தலையிடுவதற்கு நீ யார் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அமீர் சேரனின் மகளும் என்னுடைய மகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் சந்துருவின் குடும்பமானது முழுக்க முழுக்க பணம் பறிக்கும் கும்பல். சந்துருவின் அக்கா பத்மா ராமநாதபுரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகியிருந்த இலியாஸ் என்பவரோடு ரகசியமாக குடும்பம் நடத்தி அவரை ஏமாற்றி அவரிடமிருந்து 200 பவுனுக்கும் அதிகமான நகை, ஆந்திராவில் வீடு, லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். இதற்காக அவர்களது மொத்தக் குடும்படும் முஸ்லிமாக மாறியுள்ளது, மேலும் சந்துரு மானாமதுரையில் ஒரு வசதியான வீட்டுப்…
Read More சேரன் மகள் தாமினி விவகாரத்தில் அமிரின் அதிரடி தகவல்ஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில் . கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நடந்துவரும் இப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் வரும் 12ம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திரா பகுதி காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர். அப்போது சோனியா காந்தி கூறுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே அந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரசார் தெலுங்கானா அமைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்த பகுதி மக்களுக்கும் அநீதி ஏற்படுத்த வேண்டும் என் பதற்காக நாங்கள் இங்கு இருக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாருக்கும் நீதி…
Read More ஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி


