கென்யாவில் போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை

Severed head, hands sent as warning to Kenyan police கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம், மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள்…

Read More கென்யாவில் போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை

தீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை

excellent plan and effort involved in yasin arrest இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது. பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர். அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில்…

Read More தீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை

பொறியியல் மாணவியின் விசித்திர நோய்:மருத்துவமனையில் அனுமதி

unknown disease for a thiruvarur engineering college student தமிழ்நாட்டில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா(21). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார். இறுதியாண்டு படித்த போது கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில் 50 கிலோ எடையிருந்த நிவேதிதா 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். நிவேதிதாவின் குடும்பம் ஏழ்மையில் வாடுவதால் அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர், மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு…

Read More பொறியியல் மாணவியின் விசித்திர நோய்:மருத்துவமனையில் அனுமதி

அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களே மருத்துவர்கள்

sweepers and nurses are the doctors in government hospital maharashtra இந்தியாவில் சாதனைகள் ஒருபுறம் வளர்ந்தாலும் யாருக்கும் தெரியாமலும் வெளியில் வராமலும் பல அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மகாராஷ்டிராவில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை. மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. sweepers and nurses are the doctors in government hospital maharashtra Government hospitals run by…

Read More அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களே மருத்துவர்கள்

கல்யாண பரிசாய் தமிழக முதல்வர் சொன்ன குட்டி கதை

தமிழக முதல்வர் இப்பொழுதெல்லாம் எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஒரு கதையை சொல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு – பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை: புலியாக மாறினாலும் பயம் “சிலர்…

Read More கல்யாண பரிசாய் தமிழக முதல்வர் சொன்ன குட்டி கதை

நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகள்: முதலமைச்சர்..

Motivational stories by tamilnadu chief Minister Jayalalithaa  in the marriage of Housing Minister R Vaithilingam’s son Prabhu and AIADMK’s Madurai North MLA, AK Bose’s son KP Sivasubramanian’s wedding சென்னை, ஆக.31 – அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மதுரை எம்.எல்.ஏ. பி.கே.போஸ் இல்லத்திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஜெயலலிதா பரஸ்பரம் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகளை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.…

Read More நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகள்: முதலமைச்சர்..

மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.

Marriages redefined: Sanitary facilities part of contract  மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம் நடக்கும் என்ற நிலையாகிவிட்டது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் ஆவது என்பது பழமொழி. திருமணம் என்பதை கழிவறையை வைத்து நிச்சயம் செய்வது என்பது மத்திய பிரதேச மொழி. மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று போட்டோ எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற…

Read More மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.

அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்??.

Madras HC has ordered to probe into the sex scandal of Puducherry aurobindo ashram அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரம வாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு தடை கோரி ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா, ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற கேரள…

Read More அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்??.

இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி

I can only laugh at that, said former captain Ganguly on Eng players urinating on the London Oval pitch இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதை இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து கொண்டாடினர். அப்போது ஜாலியாக இருந்ததுடன், பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், இங்கிலாந்து வீரர்களின் செயலை படித்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான், வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது.…

Read More இது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி

தமிழகம் முழுவதும் சாலை மறியல் ஆசிரியர்கள் கைது

Noon meal workers and teachers staged two different agitations in Tuticorin today தூத்துக்குடியில் கருப்பு உடையணிந்து தூத்துக்குடி-பாளை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 300க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், உணவுமான்ய செலவினை உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சமையல் உதவியாளர்களை சமையல் உதவியாளர்களாக பணிஉயர்வு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் இன்று சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி தலைமையில் கருப்பு உடையணிந்து வந்த சத்துணவு பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்களை…

Read More தமிழகம் முழுவதும் சாலை மறியல் ஆசிரியர்கள் கைது