Dowry Deaths: One Woman Dies Every Hour in India இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை தொடர்பான இறப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதே வேளையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதமும் 35.8-லிருந்து 32 ஆக குறைந்துள்ளது என தெரிய வருகிறது. முன்னெல்லாம் கீழ்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களில்…
Read MoreTag: tamilnadu
விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்
arrest warrant for Vijayakanth திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட்…
Read Moreவேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
velliappan murdered in vellore திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 : வேலூர் : இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார். இன்று மதியம் 3.15 மணியளவில் வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன…
Read Moreமாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில் அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…
Read Moreதமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.
பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai
Read Moreதமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்
New Tamilnadu ministers of aiadmk Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான் மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர் தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல் மரபினர் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…
Read Moreசேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி
sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன் 2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…
Read Moreவன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை
Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார் ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…
Read Moreதமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.
Tamil nadu tourism new policy சென்னை 26 ஏப்ரல் 2013: தமிழ்நாடு 2011 ல் 14 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (13.67 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 33 லட்சம் வெளிநாட்டு பயணிகள்). 2012ல் மொத்தம் 18.76 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (உள்நாட்டு பயணிகள் 18.41 கோடி மற்றும் 35 லட்சம் வெளிநாட்டு பயணிகள்) ஆக சுற்றுலா பயணிகளின் சதவீதம் 34 வளர்ச்சி கண்டது. தமிழ்நாடு அரசு புதிய சுற்றுலா கொள்கைகள் உருவாக்கி ஆசிய மேம்பட்டு வங்கியின் {Asian Development Bank (ADB)} உதவியுடன் சுமார் ருபாய் 500கோடியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றுலா கொள்கை அதிகமாக பணம் செலவழிக்கும் பயணிகளை கவரவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீட்டாளர்களை கவரவும் திட்டம் வகுத்து அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More