சென்னை, மார்ச் 19 இரயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப் பட்டதற்கான நடவடிக்கைகள் பற்றி தெற்கு இரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சார்ந்த பிரபாகர் தாக்கல் செய்துள்ள மனு: தெற்கு இரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை சில தனியார் அமைப் புகள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இரயில் நிலைய வளாகத்தில் சில அமைப்புகள் சார்பாக அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் போர்டு, பேனர்களை தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளது. இவைகளால் இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. மேலும் இரயில்வே துறைக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரங்கள் வரைந்துள்ளார்கள்.…
Read MoreYear: 2019
தகாத உறவுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது: ஐகோர்ட்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கும், ஒரு ஆண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு நீதிபதி சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘ராஜஸ்தான் அரசு பணியாளர் நடத்தை சட்டத்தை மீறியதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று அரசு வழக்கறிஞர் கூறினார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தகாத உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பித்தார். ஆனால் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.
Read Moreபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் குற்றவாளி திருநாவுக்கரசு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கில் திருநாவுக்கரசு முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று பாதுகாப்பு நலன் கருதி பொள்ளாச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேரில் ஆஜராக்காமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் .அதில் திருநாவுக்கரசை நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க உத்தரவிட்டது அதன் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பல்வேறு தகவல்களை திருநாவுக்கரசு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக வெளிவந்துள்ளன. ஆனால் காவல்துறை தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read Moreஅரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை
மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை) அதிரடியாக தடை விதித்துள்ளது. கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சியினருடைய பிரச்சாரத்திற்கு பயன்படும் கட்அவுட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் வேண்டி மதுரையை சார்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்அவுட் வைக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் அதிகளவில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read Moreபொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை – தலைவர்கள் கண்டனம்
சென்னை : ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொள்ளாச்சியில் கல்லூரி – பள்ளி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய காமுகர்களின் பின்னணியில் ஆளுங்கட்சி உடந்தையா? இதனை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்” . இதுபோல் பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Read Moreகோவையில் பெட்ரோல் திருடும் கும்பல்
கோவை :கோவையில் உள்ள சேரன்மா நகரை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மாதம் 17ஆம் தேதி வழக்கம் போல் வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார்,பிறகு வெளியே செல்வதற்கு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது தான் பெட்ரோல் திருடப்பட்டதை உணர்த்தார். பிறகு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது நூதனமாக முறையில் அவரது பெட்ரோலை இளைஞர்கள் திருடியது தெரியவந்தது.கேமராவில் 2 இளைஞர்கள் முதலில் ஆள் இல்லாதபோது பெட்ரோல் வரும் இடத்தில் கேனை வைத்துவிட்டு செல்கிறார்கள் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் மீண்டு அந்த கேனை எடுத்து செல்கிறார்கள். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடதக்கது.
Read Moreஎத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காணாமால்போனதாக கூறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பயணிகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இவ்விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானது என்றும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் தனது…
Read Moreகேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த 31 பேர் மீட்பு!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலையில் 31 பேர் வேலை பார்த்து வந்தனர் .அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியானம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனமக்கள் ஆவார்கள்.இவர்கள் ஜெயபால் என்பவரிடம் ஒரு குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை பார்க்க வந்துள்ளனர். 3 ஆண்டுக்கும் மேலாக பெற்ற பணத்திற்காக கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்ததால் இது சம்மந்தமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு 31 பேரையும் மீட்டு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது
ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு பஸ் நிலையத்தில் இரண்டு நாள் முன்பு குண்டு வீசியதில் இரண்டு பேர் பலியானார்கள் மற்றும் 32 பேர் காயம் அடைந்தனர். இது சம்மந்தமாக ஒருவனை போலீசார் கைது செய்தனர் .அவனை விசாரித்தபோது அவன் கூறியது “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த வெடிகுண்டை ஜம்மு பஸ் நிலையத்தில் வீசினால் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் நான் வீசினேன்”என்று கூறினான். இந்த சிறுவனிடம் வெடிகுண்டை வழங்கியது ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி முசாமில் என்பது தெரிந்தவுடன் அவனையும் போலீசார் கைது செய்தனர் . அவனை விசாரித்தபோது இவன் கூறுகையில் “குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பயாஸ் என்னிடம் வெடிகுண்டை கொடுத்து மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் எறியும்படி கூறினான். ஆனால் எனக்கு…
Read Moreசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட்
சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க…
Read More