நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு! சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

மாநகராட்சி துணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு ஆக்கிரமிப்பு அகற்றும் சம்பவம் சம்பந்தமாக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் திரு.வி.க. நகரைச் சார்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் தாக்கல் செய்த மனுவில், “பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ரெட் ஏரி வரை செல்கின்றது. இச்சாலையில் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. இச்சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே 70 அடியாக விரிவாக்கம் செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அச்சாலை விரிவாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருப்பதாக கடுமையாக உள்ளதாக…

Read More

சேமநல நிதி செலுத்தாத 5970 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு  வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “தமிழகத்தில்…

Read More

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம் சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளில் இருக்கும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு சொத்து வரியை 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத இடங்களுக்கு சொத்து வரியை 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக…

Read More

மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி

Madras high court Madurai bench directs Ramanathapuram revenue officials to release seized tractors

மதுரை: வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உலக வங்கி நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது ?. அந்த நிதி மூலம் நடவு செய்யப்பட்ட மரங்கள் எவ்வளவு? என மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாநில வாரியாக மத்திய அரசும்,மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. News in English Centre and State government were asked to answer queries on the extent of deforestation by Madras High Court Madurai : Agreeing with the concerns raised by a public interest litigation petition on the need to safeguard forest areas, the Madurai Bench of the Madras…

Read More

தாம்பரத்தில் பெண்ணை கொன்று விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன் கைது

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தேவி (35) மற்றும் அவரது கணவர் தாம்பரத்தில் குணசேகரன்(54) என்பவரின் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள்.குணசேகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் இருப்பதால் அதை பராமரித்து வந்தார்கள்.தேவி மற்றும் அவரது கணவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திடீர் என இருவரும் காணவில்லை.குணசேகரன் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என்று நினைத்து இதை பெரிதாக நினைக்கவில்லை.இந்நிலையில் கடந்த 20ம் தேதி காலையில் குணசேகரன் நிலத்தில் உள்ள கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் தொட்டியில் பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த தேவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடலை கைப்பற்றிய காவல்துறை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read More

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி

நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை: வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்டது. அந்த நிறுவனம் முன்பணமாக பல லட்சம் வசூலித்துள்ளது.இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான இளைஞர்கள் அணுகியுள்ளார்கள். ஆனால் அந்த நிறுவனம் பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.இது சமந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர் .புகாரின் அடிப்படையில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது, மேலும் இந்த வழக்கு சமந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read More

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது புதுடெல்லி: ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது .ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி: ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது . அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Read More

லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6…

Read More

இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்

மதுரை: 19 மார்ச் : வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா?…

Read More

சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி

சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் "ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419, 420, 468, 471, 506(வீ) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்திவருகின்றனர்.மோசடி செய்த பணத்தில் நிலங்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியது தெரியவந்துள்ளது.

சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419,…

Read More