டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது

டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது புதுடெல்லி: ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது .ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி:
ரவிசந்திரன் என்பவர் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்துள்ளார். ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விடப்பட்டது . அந்த டெண்டர் கிடைக்க சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அதிபரிடம் ரவிசந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது .லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் நிறுவனத்தின் அதிபர் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார்.

சி.பி.ஐயின் வழிகாட்டுதலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நேற்று ரவிசந்திரனிடம் நிறுவனத்தின் அதிபர் வழங்கினார். பிறகு அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரவிசந்திரனை கைது செய்து,அந்த லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related posts