விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.அவர் தன்னுடைய பெண்ணுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு சீத்தாராமன் அக்கிராம நிர்வாக அலுவலரை அணுகி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகவும் ரூ.1000 லஞ்சமாக கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாக கூறியதாகவும் ,லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜீவ்காந்தி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி கடந்த 7.1.2011 அன்று அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி வழங்கியுள்ளார். அதை மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீத்தாராமனை பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. நேற்று நீதிபதி பிரியா அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படியுங்கள்
- டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது
- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
- இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
- விஜய் அரசு ஆறு மாதம்: நலத்திட்டங்கள், பட்ஜெட், சர்ச்சைகள் – இதுவரை பதிவான தகவல்கள்
- வீரமணி போக்சோ வழக்கு: இதுவரை நடந்தது என்ன? குற்றப்பத்திரிகை எப்போது? நவ. 10 விசாரணை
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
← முந்தைய செய்தி: இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்
அடுத்த செய்தி →: டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது

