கைபேசியில் வலைத்தளம் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு

After Facebook, now access Twitter on mobiles without Internet

After Facebook, now access Twitter on mobiles without Internet

உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை.

இதனால் டுவிட்டரின் பயன்பாடு குறைவாக இருப்பதாக கருதி மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது.

ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார். சிறிய கோட் நெம்பரை டயல் செய்தாலே ட்விட்டருக்குள் எளிதாக நுழைய முடியும்.

யு2யோபியா நிறுவனத்தின் மூலம் டேட்டா இணைப்பு இல்லாமலேயே பேஸ்புக்கையும், கூகுள் டாக்கையும் 11 மில்லியன் சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. இச்சேவை தொடங்கப்பட்டால் செல்போன் வைத்திருப்பவர்கள் ட்விட்டருக்குள் எளிதில் நுழைய முடியும்.

After Facebook, now access Twitter on mobiles without Internet

Almost 70 crore mobile users in India and around 80 per cent in emerging markets, who do not have a mobile data connection, would soon be able to access social networking site Twitter using U2opia Mobile’s app.

Related posts