பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police by Traffic Ramasamy

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டிராபிக் ராமசாமி ஆஜராகி வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞ்சர் (Advocate), எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் காவல்துறையினர் அப்புறப்படுத்திவிட்டனர் என்று வாதிட்டார்.இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் நீதிபதி, ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதி மன்றம் முன்பே உத்தரவிட்டுள்ளது. இருந்த போதும், அந்த நபர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேட்டார்.

மேலும், ‘ஆளும் கட்சிகாரர்கள், எதிர்க்கட்சிகாரர்கள் என கட்சி பாகுபாடு பாராமல் சட்டவிரோதமாக எல்லோருக்கும் பேனர்களை வைக்க அனுமதிப்பது ஏன்?. டிராபிக் ராமசாமி தனக்காக ஏதும் ஒன்றும் போராட்டம் நடத்தவில்லை. பொதுநலனுக்காகத்தான் போராட்டம் செய்கிறார். சட்டவிரோதமாக சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள் முறிந்து பொதுமக்கள் மீது விழுந்தால், பாதிக்கப்படுவது யார்? என அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்’ என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர், ‘எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை போலீஸ் கமிஷனர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.

English News : 

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police

 
CHENNAI: The Madras High Court directed the Chennai Commissioner of Police to consider K R ‘Activity’ Ramaswamy’s portrayal looking for activity against the Egmore Inspector of Police for his inability to expel unapproved Banners raised along Ethiraj College Road.
Discarding the request, Justice P N Prakash said Ramaswamy was not battling for himself. “We should comprehend that general society would be influenced if such Illegal Banners fall,” he said.
 
On June 10, Ramaswamy saw a few illegal Banners raised on the person on foot path along Ethiraj College Road by Pattali Makkal Katchi (PMK). quickly, he held up a Complaint with the Egmore police following which all of the Banners were expelled by Police staff. In this case, at around 7pm that day, the Banners were raised once again at similar spots.
 
Charging that the Egmore police overseer plotted with the PMK partymen and gave over the seized Banners promptly he cleared out the place, Ramaswamy sent a portrayal to the Commissioner of Police looking for Departmental activity against the Police Inspector.
 
Since the Commissioner neglected to react or make a move, Ramaswamy moved toward the Court for Remedy. He needed the court to direct the Commissioner to consider his portrayal dated June 10 and start activity against the police inspector.
 
At the point when the case came up for Hearing, the Court considered how such illicit acts were permitted even after the First Bench of the Court headed by the Chief Justice had over and over passed a progression of Directions denying such Banners.

Related posts