அரசு உதவிபெறும் பள்ளிக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ரத்து செய்த விவகாரத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் கட்டடத்துக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வழங்கிய தடையில்லாச் சான்று உரிமம் கடந்த 2018-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள வணிக ரீதியான கட்டடங்களை அப்புறப்படுத்தவும், தீயணைப்பு தடுப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.…
Read MoreYear: 2019
மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும்…
Read Moreசெயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செயற்கை மழைத் திட்டம் வாய்ப்பு உள்ளதா ?. அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 31 2019 தண்ணீர்ப் பற்றாக்குறையைப் தீர்க்க செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?. என்று என மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது பற்றி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடந்த 16 -ஆம் தேதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி களுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்அய்டிஅய்- என்ற தனி யார் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், 2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்…
Read Moreதிருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர்
பெங்களூர்:கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர் திருமண தகவல் அலுவலகம் மூலம் தனது பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்த ரக்ஷா (26) என்ற பெண்ணை திருமணம் பேசி முடித்து, இருவருக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்ஷா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய அழைத்து சென்றுள்ளார்.கணவர் டாக்டரிடம் ரகசியமாக பேசி மனைவிக்கு தெரியாமல் கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளார்.சந்தேகத்திற்கு காரணம் திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் ரக்ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.திருமணம் பிடிக்காததால் தான் ரக்ஷா இப்படி இருப்பதாக சரத் தவராக கருதியுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் ரக்ஷாவின் உறவினர் ஒருவர் ஏராளமான உதவிகளை செய்ததால் அவர்…
Read Moreசரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
டெல்லி: சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது . சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் .இவரது மனைவி பெயர் ஜீவஜோதி. கொடைக்கானல் மலையில் சரவணபவன் ஹோட்டலின் ஊழியர் சாந்தகுமார் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வந்தது.ராஜகோபால் தான் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றதாக கூறப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஹை ஐகோர்ட் ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.இந்த…
Read Moreகோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை :பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது பொது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.பொள்ளாச்சியின்பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்டதால் எஸ்பி மற்றும் உள்துறை செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை…
Read Moreபோலி பட்டா குற்றச்சாட்டு: உயர்நீதிமன்றம் அதிரடி பரிந்துரை
மதுரை:நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் பொறுப்பில் அவரது சகோதரர் தனது சொத்துக்களை ஒப்படைத்து விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். சகோதரர் மும்பையில் வசிப்பதால் சண்முகவேல் நிர்வகித்து வந்துள்ளார் . அவரது சகோதரர் சொத்துக்களுக்கு அரசு அதிகாரிகள் போலி பட்டா தயாரித்து இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிட்டதாக சண்முகவேல் புகார் அளித்து , போலி பட்டா மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உயர்நிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பிறகு போலி பட்டா தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஜூலை 3ம் தேதிக்குள்…
Read Moreஅனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார் .மனுவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகள் அரசியல் கட்சியினர் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டு சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் , மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகளை அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக தோண்டுவதை கட்டுப்படுத்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொடிக்கம்பங்கள் நடுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு பாதிக்க…
Read Moreபுதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் சரிதான் : உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினரை சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்து புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு சரிதான் என உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் . புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி வந்த இவரது தந்தை வருமானத்துக்கு கூடுதலாக சொத்து குவித்தது சம்பந்தமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அசோக் ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த புதுச்சேரி சி.பி.ஐ நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் வருமானத்துக்கு…
Read Moreஅழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய்
பிகார்:பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா பகுதியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் தாய் கோபம் அடைந்துள்ளார் . குழந்தை அழுத காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான அந்த தாய் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய குழந்தையின் தந்தை,குழந்தை ஏன் அமைதியாகவே இருக்கிறது என்று அருகில் சென்ற போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வருவதை கண்டறிந்தார். இதுகுறித்த விசாரித்தபோது போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More