கோவை :கோவையில் உள்ள சேரன்மா நகரை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மாதம் 17ஆம் தேதி வழக்கம் போல் வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார்,பிறகு வெளியே செல்வதற்கு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது தான் பெட்ரோல் திருடப்பட்டதை உணர்த்தார்.
பிறகு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது நூதனமாக முறையில் அவரது பெட்ரோலை இளைஞர்கள் திருடியது தெரியவந்தது.கேமராவில் 2 இளைஞர்கள் முதலில் ஆள் இல்லாதபோது பெட்ரோல் வரும் இடத்தில் கேனை வைத்துவிட்டு செல்கிறார்கள் பிறகு பெட்ரோல் நிரம்பியதும் மீண்டு அந்த கேனை எடுத்து செல்கிறார்கள். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடதக்கது.