புதுடெல்லி:ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்த கார்டுகளை தரமாக தயாரித்து கொள்ளும்படி மாநில அரசுக்கு கூறியுள்ளது.
Read MoreYear: 2019
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case
Read Moreதிருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !
சென்னை: 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் . இதற்கு காரணம் திருமணத்தை மீறிய உறவுகள் தான். இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள், டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் பற்றியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக திருமணத்துக்கு மீறிய உறவுகளை கணவனோ, மனைவியோ வைத்துக்கொள்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் குறித்து மத்திய மற்றும் மாநில…
Read Moreஅரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்
சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.
Read Moreசின்னத்திரை சீரியல், சினிமாவின் தாக்கத்தினால் சீரழிகிறதா குடும்ப உறவு ? : சென்னை உயர் நீதிமன்றம்
திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை தொடர் மற்றும் சினிமா தான் காரணமாக இருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருமண உறவை மீறிய உறவு வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை சீரியல்களும், சினிமாவும் காரணமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். . மேலும், ஆண் மற்றும் பெண்கள் சுயமாக பொருள் ஈட்டினாலும், இருவர் பொருளாதார உயர்வினாலும் இதுபோன்ற உறவுகள் அதிகரிக்கிறதா எனவும் பேஸ்புக், வாட்ஸ் -அப் போன்ற சமூக வலைதளங்கள் திருமண உறவை…
Read Moreசென்னை அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய வடமாநில இளைஞர்!
சென்னை: அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வடமாநில இளைஞர் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் கட்டுக்கட்டாக பணம் செலுத்தி உள்ளார். அவரிடம் அருகில் இருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை பற்றி அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் தெரிவித்தார். பிறகு காவலர்கள் சம்மந்தப்பட்ட இளைஞரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது தட்டுத் தடுமாறி தான் பதிலளித்தார் . அவரிடம் இருந்த மொத்த பணம் ரூ.17.8 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது . பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் ரத்தர் சாகிப் (29) என்றும் ,சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்ததும்…
Read Moreபறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read Moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கு : சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மார்ச் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியிலுள்ள வைத்தியநாதன் பதவி உயர்வு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார். இக்கோரிக்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு விதியின் அடிப்படையில் உதவி பேராசிரியரின் கோரிக்கை பரிசீலிக்கபட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்ததை பல்கலைக்கழகம் செயல்படுத்த வில்லை. இதையடுத்து அவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணி, உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தாமல் பல்கலைக்கழகப் பதிவாளர்…
Read Moreநாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் சென்னை: பட்டா கோரிக்கை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து லோகநாதன் என்பவர் தொடர்ந்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. எனினும் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்க கோரிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் வேணுகோபால், மற்றும் நீதியரசர் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, இவ்விவகாரத்தில்…
Read Moreவிவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றக்கோரி நீதிபதியிடம் வாக்குவாதம் பெண் மீது வழக்கு: குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை: தனது விவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றம் செய்ய கோரி நீதிபதியிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவத்தால் குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் செய்த பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. இதில் குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் நேற்று காலை விவாகரத்து வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான பெண் ஒருவர், ‘‘தவறான தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்… அதனை மாற்றி வழங்குங்கள்… என சத்தமாக நீதிபதியிடம் முறையிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, ‘‘நீங்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்’’ என்று கூறினார். ஆனால், அந்த பெண், ‘‘நீங்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் ஏன்…
Read More