சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய வடமாநில இளைஞர்!

சென்னை: அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வடமாநில இளைஞர் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் கட்டுக்கட்டாக பணம் செலுத்தி உள்ளார். அவரிடம் அருகில் இருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை பற்றி அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் தெரிவித்தார். பிறகு காவலர்கள் சம்மந்தப்பட்ட இளைஞரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது தட்டுத் தடுமாறி தான் பதிலளித்தார் . அவரிடம் இருந்த மொத்த பணம் ரூ.17.8 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது . பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் ரத்தர் சாகிப்(29) என்றும் ,சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலாக இருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட நபரை அமலாக்கத்துறையில் போலீசார் ஒப்படைத்தனர்.இந்த பணம் பற்றி அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவரும் .

சென்னை: அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வடமாநில இளைஞர் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் கட்டுக்கட்டாக பணம் செலுத்தி உள்ளார். அவரிடம் அருகில் இருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை பற்றி அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் தெரிவித்தார்.

பிறகு காவலர்கள் சம்மந்தப்பட்ட இளைஞரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது தட்டுத் தடுமாறி தான் பதிலளித்தார் . அவரிடம் இருந்த மொத்த பணம் ரூ.17.8 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது . பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் ரத்தர் சாகிப் (29) என்றும் ,சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலாக இருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட நபரை அமலாக்கத்துறையில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த பணம் பற்றி அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவரும் .

Related posts