நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மார்ச் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியிலுள்ள வைத்தியநாதன் பதவி உயர்வு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார். இக்கோரிக்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு விதியின் அடிப்படையில் உதவி பேராசிரியரின் கோரிக்கை பரிசீலிக்கபட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்ததை பல்கலைக்கழகம் செயல்படுத்த வில்லை. இதையடுத்து அவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணி, உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தாமல் பல்கலைக்கழகப் பதிவாளர்…
Read MoreYou are here
- Home
- High court