Transgenders are the ‘third gender’, rules Supreme Court திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு. மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள்…
Read MoreYear: 2014
இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..
Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…
Read Moreதஞ்சை பா.ஜ.க வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன், வை.கோ, அன்புமணி கடும் கண்டனம்
BJP Thanjavur Candidate attacked and prevented from canvassing in a Muslim area has evoked serious condemnations from the leaders of NDA in Tamilnadu. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். BJP Thanjavur Candidate attacked and prevented from canvassing in a Muslim area has evoked serious condemnations from the leaders of NDA in Tamilnadu. a clash erupted between the SDPI and BJP cadre and 4 cars were damaged and one more was pushed into a dry…
Read Moreமணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பயனிக்கும் அதிநவீன கார்
உலகில் அதிவேக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினர் இக்காரை வடி வமைத்துள்ளனர். அதில், விண்வெளி, ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 என்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் கலக்கப்பட்டுள்ளன. ‘சூப்பர் கானிக்’ என்றழைக்கப்படும் அதிவேக கார் தயாரிக்கும் பணி கடந்த 2008–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது இப்பணி முடிவடைந்து விட்டது. அது சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும். இக்காரை விங் கமாண்டர் ஆன்டிகிரீன் இயக்குகிறார். இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் கார் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2016–ம்…
Read Moreகாஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை : காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரை சோதனை செய்தபோது, இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம் வெளிநாட்டு கரன்சி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, யுஏஇ எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணம் மாற்றம் செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்வதாகவும் தெரிந்தது. மேலும் காரில், அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலாஜி என்பவர் உள்பட 3 பேர் இருந்தனர். Kanchipuram flying squad இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரித்தார். பின்னர், அந்த கரன்சிகளை பறிமுதல் செய்து…
Read Moreமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக களம் இறங்கிய ஒரு திருநங்கை
நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு திருநங்கை விண்ணப்பித்து இருக்கிறார். இதன் மூலம் மதுரை தொகுதியில் போட்டியிடும் பாரதி கண்ணம்மா அரசியல் கட்சிகளின், மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறார். அனேகமாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் இவர் இந்தியாவின் முதல் திருநங்கையாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன என்று கேட்டோம் அவரிடம். “பல பெரிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்று எம்.பி.யாவேன் என்பதெல்லாம் இப்போது உடனே இயலாத காரியம் என்பதை நான் அறிவேன். எனினும் இதர பாலினத்தவர்களில் ஒருவர் போட்டியிடுவது என்பது தேர்தல் அரசியலில் நாங்களும் பங்கேற்கிறோம் என்பதை அறிவிக்கவும் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலும்கூட நாங்கள் இன்னும் வலுவாக எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலுமே களம் இறங்கி இருக்கிறேன்…
Read Moreஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்
World Health Day celebrated தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம். அந்த வகையில் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் அமைப்பான உலக சுகதார அமைப்பின் சார்பில் இன்று “உலக சுகாதார தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். ஒருங்கிணைப்பு பணி: இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஜெனிவா அமைப்பு: இந்நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. நோய்களை விரட்டுங்கள்; இதன் முக்கிய வேலையானது “தொற்றுநோய்கள்” போன்ற நோய், நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில்…
Read Moreஅருஞ்சுனை காத்த அய்யனார் – கழுகாசலமூர்த்தி கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர், குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார், கழுகுமலை கழுகாசலமூர்த்தி சுவாமி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலப்புதுக்குடி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் இரவு…
Read Moreபாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறை
9 month old booked for attempted murder in Pakistan மின்சாரம் வேண்டி நடந்த போராட்டத்தில் பெற்றோருடன் வந்திருந்த 9 மாத குழந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் பாகிஸ்தான் போலீசார். இந்த விநோதமான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது யாசீன் தங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப் படாததைக் கண்டித்து தனது குடும்பத்தினர் உட்பட் 25 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதில் காயமடைந்த காவலர்கள் தங்களைத் தாக்கியதாக போராட்டம் நடத்திய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், போராட்டம் நடத்திய யாசீனின் ஒன்பது மாத பேரன் தன்னைத் தாக்கியதாக,…
Read Moreநரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் தோல்வியுற செய்வதே என் லட்சியம் – : ஆம் அத்மி தலைவர் கெஜ்ரிவால்
Aam Aadmi Party chief Arvind Kejriwal on Wednesday expressed confidence of defeating Narendra Modi in Varanasi Lok Sabha constituency in the general election, saying that he had not chosen a “safe” seat since his main objective was to beat the BJP’s prime ministerial candidate. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக நேற்று 3-வது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா…
Read More