Bang go the mangos as the EU bans 16million from India amid fears that they’re pest-ridden பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செயய் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கிட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இந்தி பூச்சிகளால் இங்கிலாந்து உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரிச் செடிகளுக்கு ஆபத்து வரலாம் என்று ஐரோப்பிய யூனியன் சந்தேகிக்கிறதாம். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்டு வரையிலான மாம்பழங்களை இங்கிலாந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை…
Read MoreYear: 2014
இந்திய சிறைக் கைதிகளாக நாலு லட்சம் வாக்காளர்கள்!!
There is totally 4 lakhs people being accuse into the jail. So, they are not allowed to do their democratic duty. தினம் தினம் அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையால் வெளியில் இருக்கும் மக்களைவிட, சிறைக்குள் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மொத்தமாக உள்ள 1,400 சிறைகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், காவல் நீடிப்பு கைதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு கைதிகள் உள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் அவருடைய வாக்குரிமை உட்பட சட்டப்படி அங்கீகரிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் இழக்கிறார். இதனால், இவர்களுக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் இருப்பவர்களில் விசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால்,…
Read Moreஜார்கண்டில் வரதட்சணை கொடுமை: கிட்னியை கொடுத்த மனைவி தீக்குளித்து தற்கொலை
Jharkhand woman gives kidney to husband as dowry, kills self after six months நோய்வாய்ப்பட்ட கணவனைக் காரணம் காட்டி பாக்கியுள்ள வரதட்சணைப் பணத்திற்கு மனைவியின் கிட்னியை கொடுக்குமாறு செய்ததால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் தேவி என்ற இந்தப் பெண்ணிற்கும் சுதாமா கிரி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுதாமா கிரி குடும்பம் பூனம் தேவி குடும்பத்திடமிருந்து ரூ.1.31 லட்சம் வரதட்சணைப் பெற்று கொண்டனர். இருந்தாலும் போதவில்லையாம்! தொடர்ந்து பூனம் தேவியை வரதட்சணை கேட்டு துன்பம் செய்துள்ளனர். இந்த நிலையில் கணவன் சுதாமா கிரி நோய்வாய்ப்பட்டார். அவரது கிட்னி செயலிழந்தது. இந்த நிலையில் பூனம் தேவி அவரது கிட்னியை கணவனுக்கு தானமாக அல்லாமல் வரதட்சணையாக…
Read Moreதமிழகத்தில் வாக்களிக்க வசதியாக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை
Polling day: Holiday must for all on Thursday, says Tamil Nadu Government தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 135 பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள்,…
Read Moreநடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன்
Wife claims husband affixed tracker in her body ‘டிராக்கர்’ எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால்…
Read More2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்: முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
2G spectrum allocation case : Delhi court on Monday fixed May 5 for commencement of recording of statements of former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi and 15 others facing trial : 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவின் வாக்குமூலம் மே 5ம் தேதிக்கு பதிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ராசாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டனர். 2G spectrum allocation case A Delhi court on Monday…
Read Moreஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ள இலங்கை
ஊடகத்துறை தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தண்டனை அளிக்காத நாடுகள் பட்டியலில், இலங்கை 4 ஆம் இடத்தில் இருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சி.பி.ஜே) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது, அதில் கடந்த 10 ஆண்டகளில் 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட போதும், அதில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை தண்டிக்காத ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல் சோமாலியா இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்சு மூன்றாவது இடத்தை வகிக்கின்றன. இராணுவம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக கொல்லப்பட்ட செய ஐயாத்துரை நடேசன் மற்றும் செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க உட்பட 9க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருடைய மரணத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு…
Read Moreநரேந்திர மோடி ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் இருக்கிறார்? : – உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி
pazha nedumaran upset over modi not speaking about ezham tamils ஈழத் தமிழர் பிரச்சனை சம்பந்தமாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஓர் பிரபல பத்திரிக்கைக்கு நெடுமாறன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், பா.ஜ.க தங்களது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றியும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் இந்திய தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது போன்ற பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க தலைமை இந்த பிரச்னைகளை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. மேலும், பிரசாரத்திற்கு தமிழகம் வந்த நரேந்திரமோடியும் மேற்கூறிய பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் நேரடியாக தெரிவிக்கவில்லை. இது நரேந்திர…
Read Moreதென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து
Hundreds Remain Missing After South Korean Ferry Sinks தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான படகில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர். ஜிஜீ தீவுகளுக்கு தென் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனையடுத்து படகில் இருந்து உதவி கோரப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் சென்றனர். கப்பல் நீரில் மூழ்கியதில் 2 பேர் பலியாகினர். 180 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் 16 ஹெலிகாப்டர்கள், 34 மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Hundreds Remain Missing After South Korean Ferry Sinks About 160 passengers, including…
Read Moreஅசாமில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் 50 பயணிகள் காயம்
Train derails in Assam அஸ்ஸாம் மாநிலத்தில் திம்பூர்–கமாக்யா இடையே சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது, இந்த விபத்தில் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அஸ்ஸாமில் உள்ள மோரிகான் பகுதியில் சென்று கொண்டிருந்த 15666 BG எக்ஸ்பிரஸ் ரயில் அஜுரி ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. ஒன்றன்பின் ஒன்றாக 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால், சுமார் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களில் 17 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர்கள் மோரிகானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Train derails in Assam Over 50 passengers were injured, 19 of them seriously, when the engine and 10 coaches of the Dimapur-Kamakhya BG Express derailed…
Read More