Election officials have searched the helicopter used by CM Jayalalithaa after she landed in Coimbatore on tuesday. பொள்ளாச்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த முதல்வரின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக நேற்று சோதனையிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய, பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள பல ஏக்கர் மைதானத்தில் பிரசார பொதுக்கூட்ட மேடையும், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வந்தார். பின்பு விழா மேடைக்கு காரில் சென்றார். தொடர்ந்து, பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ், தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், முதல்வர் வந்த ஹெலிகாப்டரை அதிரடியாக…
Read MoreYear: 2014
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!
Supreme Court dismissed hanging of 3 Rajiv killers today பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது! முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்வதாக, இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு முருகன் உள்ளிட்ட அந்த மூன்று பேரின் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைசாலையில் இருக்கும் நளினி மற்றும் நால்வரோடு சேர்த்து 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
Read Moreமக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னும் கட்சியின் தேசியத் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றுவேன்: ராஜ்நாத் சிங்
Rajnath Singh said that he will continue as president of BJP even after the success in the upcoming Lok Sabha election லக்னோ :- லக்னோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லையென்றால் தலைமை பதவியில் நீடிப்பீர்களா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ராஜ்நாத் சிங், “தங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தான் அந்த கட்சியின் தேசிய தலைவராகவே பணியாற்றுவேன்“ என தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற மக்களவை தேர்தலில் 272 க்கும் கூடுதலான இடங்களில் பா.ஜ.க. வெற்றியடைந்து நரேந்திர மோடி பிரதமராக ஆவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் டிக்கட் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “ தமது கட்சியின் எல்லா முடிவுகளும் கட்சியினுடைய…
Read Moreசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக டோனி விருப்பம்
MS Dhoni offers to give up CSK captaincy: Reports ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக டோணி முடிவு செய்து ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது வீரர்கள், அணி நிர்வாகிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த கமிட்டியின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் வாக்குமூலம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ்…
Read Moreதமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார்
Tamil nadu State police department under election commission control தமிழக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது: தமிழக தலைமை தேர்தல்ஆணையர் பிரவீன் குமார் சென்னை: சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் பிரவீண் குமார் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி., முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தினுடைய ஆணைப்படி அதன் கட்டுப்பாட்டில் செயல்பட உள்துறை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளை தவிர்த்து ஏனைய கட்சிகள் எதுவும் சமூக இணையதளங்களில் பிரசாரம் செய்ய முன் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை, ருபாய் 13 கோடியே 16 லட்சம் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. சுமார் ருபாய் 6 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யபட்டிருக்கிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணியில் சுமார் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்…
Read Moreஇந்திய ராணுவ விமானம் சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விழுந்து நொறுங்கியது
IAF’s C-130J Super Hercules aircraft crashes; 5 crew dead மத்திய பிரதேசத்தில் குவாலியர் அருகில் மத்திய விமானப் படைக்குச் சொந்தமான C-130 J என்ற பிரமாண்ட விமானம் விழுந்து நொறுங்கியது. உத்தர்காந்த் வெள்ள மீட்பு, சமீபத்திய MH370 மலேஷியன் ஏர்லைன்ஸ் தேடுதல் வேட்டை ஆகியவற்றில் இந்த விமானமும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ‘சூப்பர் ஹெர்குலஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டிருந்தது. விமானப்படை வீரர்கள் எத்தனை பேர் அதில் பயணம் செய்தார்கள் என்று இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. ஆக்ராவிலிருந்து கிளம்பிய விமாணம் குவாலியரிலிருந்து 72 மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விமானம் மிகுந்த பாதுகாப்பானது என்று கூறப்பட்டது. வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும், மிகச் சிறிய ஓடு பாதைகளிலும் கூட இந்த விமானத்தை…
Read Moreமார்ச் 24 சர்வதேச காச நோய் நாள்
Today is World TB Day அனைத்துலக காச நோய் நாள் மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய்…
Read Moreஇன்று ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள்
Today G.D.Naidu birthday மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று..!! தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார். ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக…
Read Moreமார்ச் 23 உலக வானிலை தினம்
World Meteorological Day வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. வானிலை மாறுபடுவதால்…: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது. காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.…
Read Moreமாயமாகி போன மலேசிய விமான தேடுதல் வேட்டை: உலக நாடுகளின் கடுமையான போராட்டம்
ஆஸ்திரேலியா :- சிட்னி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரமான பெய்ஜிங்குக்கு 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமாகி போனது . கடந்த 8 நாட்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து , மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, வியட்நாம் உட்பட 26 நாடுகள் தேடிவருகின்றன. எனினும் எந்த வித தகவலும் நேற்றுவரை கிடைக்கபெறவில்லை காணாமல் போன் விமானத்தை இந்திய பெருங்கடலின் 2 பகுதிகளில் தேடப்பட்டு வருகிறது . முதல் பகுதி வடக்கு தாய்லாந்து முதல் கஜகஸ்தான் எல்லை வரையிலும், 2-வது பகுதி இந்தோனேஷியாவில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் வரை தேடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய ராடாரில் இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருடகள் காணப்படுவதாகவும், இந்நிலையில் மாயமான…
Read More