ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்

World Health Day celebrated

தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம். அந்த வகையில் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் அமைப்பான உலக சுகதார அமைப்பின் சார்பில் இன்று “உலக சுகாதார தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.  ஒருங்கிணைப்பு பணி: இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஜெனிவா அமைப்பு: இந்நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. நோய்களை விரட்டுங்கள்; இதன் முக்கிய வேலையானது “தொற்றுநோய்கள்” போன்ற நோய், நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். உலக சுகாதார தினம் இன்று: அந்த அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர்.

World Health Day celebrated

Related posts