உலகில் அதிவேக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினர் இக்காரை வடி வமைத்துள்ளனர். அதில், விண்வெளி, ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 என்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் கலக்கப்பட்டுள்ளன. ‘சூப்பர் கானிக்’ என்றழைக்கப்படும் அதிவேக கார் தயாரிக்கும் பணி கடந்த 2008–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தற்போது இப்பணி முடிவடைந்து விட்டது. அது சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும்.
இக்காரை விங் கமாண்டர் ஆன்டிகிரீன் இயக்குகிறார். இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் கார் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
2016–ம் ஆண்டில் இந்த கார் தென்ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கேர்பான் பாலை வனப் பகுதியில் ஓட்டி சாதனை நிகழ்த்த திட்ட மிடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இதை இந்தியாவில் குஜராத்தில் உள்ள ரான்ஆப்கட்ச் பகுதியில் ஓட்ட திட்டமிடப்பட்டது. அங்கு 30 டிகிரி செல்சியசுக்கும் மேலாக வெப்பம் இருப்பதால் கார் என்ஜினின் வேகம் பாதிக்கும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன் பான் பகுதியில் 10 முதல் 20 டிகிரி செல்சியசே நிலவுகிறது. எனவே அங்கு சோதனை ஓட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.