மரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்

environmental activist married a tree in Argentina சராசரியாக ஓர் மனிதன் நாள் ஒன்றுக்கு 3 சிலிண்டர்களின் அளவு ஆக்ஸிஜனை சுவாசம் செய்கிறான். தற்சமயம் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை ருபாய் 700/- ., 3 சிலிண்டர் விலை ருபாய் 2100/-. ஓர்  வருடத்திற்கு ருபாய் 7,66,000/- க்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஓர்  மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 வருடம் எனில் ரூபாய் 5 கோடிக்கு மேல் போகிறது., இப்படி விலை உயர்ந்த, மதிப்பு கூடுதலான  சுவாச காற்றை உயிரினங்களுக்காக இலவசமாக பச்சை மரங்கள் தருகின்றன. ஆக நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள் இயற்கை மனித இனத்திற்கும் என்னய்யா உயிர் இனங்களுக்கும் தந்த பொக்கிஷம் என்பதையும் மனிதர்கள் உணரும் விதத்தில் ஓர் புதிய முயற்சியை எடுத்தார் பெரு…

Read More

இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு

India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட்…

Read More

டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…

Read More

கொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.

British PM’s sudden rendezvous, savours famous Kolkata street food! மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதமர் ஓர் தெரு ஓரக்கடையில் வடையை வாங்கி சாப்பிட்டது அங்கே இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு.டேவிட் கேமரூன் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு போனார். அவரது அந்த பயணத்தின் நடுவே ஜோகாவில் இருக்கும் ஓர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடினார். அதற்கு பின், தூதரக அதிகாரிகளுடன் மத்திய கொல்கத்தாவில் உள்ள தெருக்கடைக்கு சென்று வண்டியை விட்டு இறங்கி. ‘விக்டோரியா வடா ஷாப்’ என்னும் கடைக்கு சென்றார். கொல்கத்தாவின் தெருக்கடை உணவை சுவைக்க நினைத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவரே…

Read More

சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.

Green organics chennai stores and Agro Food products exporters கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம் Green organics chennai stores and Agro Food products exporters சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??. வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது. ரசாயன கலப்பில்லாத உணவு : ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ்,…

Read More

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பரவும் புதிய நோய்

தமிழக அரசின் இலவச திட்டத்துக்காக ஆந்திராவில் இருந்து வாங்கிய மாடுகளால்தான் கோமாரி நோய் பரவியதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் பலியாகி உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் இலவச மாடு வழங்கும் திட்டத்தால்தான் கோமாரி நோய் பரவியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபி கணேசன் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கோமாரி நோயால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளன. கிராம பொருளாதாரத்தை உயர்த்தவும், ஏழை, எளிய மக்களின் வருமானத்தை பெருக்கவும் அரசு விலையில்லா மாடுகளை வழங்கி உள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்…

Read More

திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   abdul kalam admitted in hospital

Read More

வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.

கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை., இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில்…

Read More