கர்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு: குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்

Iodine Deficiency In Pregnant Women May Harm Babies கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இது பற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட ‘தி லான்செட்’ என்ற பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையில், மனித உருவாக்கத்தில் தைராய்டு சுரப்பிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள், அயோடின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பால், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற அயோடின் சத்து நிரம்பிய பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமே கர்ப்பிணித் தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அந்தப் பத்திரிகை தெளிவாக்குகின்றது. சமீபத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தினால், 324 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 263 மாவட்டங்களில்…

Read More

அமெரிக்காவில் நடந்த புவியியல் போட்டியில் இந்திய வம்சாவழி மாணவர் முதலிடம்

Indian-American wins National Geographic Bee அமெரிக்காவில் உள்ள ‘நேசனல் ஜியோகிராபிக்’ என்ற அமைப்பு ‘நேசனல் ஜியோகிராபிக் பீ’ என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார். இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டொலர்(ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார்…

Read More

ஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது

harry potter book records ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. 25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், படிப்படியாக கூடிக்கொண்டே போனதால் ஏல அரங்கில் பயங்கர நிசப்தம் நிலவியது. இறுதிக் கட்டத்தில் 2 முக்கிய பிரமுகர்கள் மட்டும் போட்டியில் இருந்தனர். இறுதியாக அதில் ஒருவர் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு அந்த புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்’ என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. harry potter book records

Read More

தமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்

Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government 2013வியாழன் 23 இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.…

Read More

இலங்கை தமிழர் மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Srilankan origin Businessman murders family, commits suicide சென்னை பழவந்தாங்கலில் கடந்த பல ஆண்டுகளாக  குடியிருந்த சுந்தரேசன் (வயது 48) என்ற இலங்கை தமிழர், மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினையே காரணம் என நம்பபடுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். Srilankan origin Businessman murders family, commits suicide

Read More

குடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்

tamilnadu government officers carelessness Tv anchor lingesh குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்”  அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார். ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக  பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன்  வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என்   குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா  அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள்,  பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை  தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே…

Read More

தமிழ்நாடு அரசின் புதிய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி

Dr Niranjan Mardi IAS சென்னை 22 மே 2013: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய முக்கிய நியமனங்கள்: ராஜீவ் ரஞ்சன் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் ( முன்பு வகித்த பதவி: வருவாய்த் துறை செயலாளர்) ககன்தீப் சிங் பேடி – வருவாய்த் துறை செயலாளர் ( முன்பு வகித்த பதவி: கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்) எஸ். விஜயகுமார் – கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (முன்பு வகித்த பதவி: ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்) கிரிஜா வைத்தியநாதன் –…

Read More

குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா

Saudi Arabia displays corpses of 5 executed Yemeni men ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும் மதிப்பு கொடுக்காத இந்தக் குற்றவாளிகளின் உடல்கள் பொது இடத்தில் கிடத்தப்பட வேண்டும். நாட்டில் ஊழலும், லஞ்சமும் இருப்பதை மற்றவர் உணரவேண்டும் என்று சவுதியின் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் குற்றங்கள் செய்ய எண்ணுவோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று கொலைச் செய்யப்பட்ட அவர்களின் உடல்கள், சவுதியின் தென்பகுதியில் உள்ள ஜாசன் நகரின் ஒரு சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு…

Read More

நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக “நாசா” தெரிவித்துள்ளது. மணிக்கு 90,000 கிலோமீற்றர் வேகத்தில் வந்த விண்கல் ஒன்று நிலவை மோதியதினால் அங்கு சுமார் 20 மீற்றர் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று நாசாவின் விண்கல் சுற்றுசூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் கூறுகையில், சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17ம் திகதி நிலவில் மோதியது. அப்போது இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது என்று கூறியுள்ளார். இது போல் பல நிகழ்வுகள் தினமும் விண்ணில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும்  இல்லையா என்ற கேள்விக்கு பதில் அவரிடம் இருந்து இல்லை.

Read More

நாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன் சபரிநாதன். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமின் மகன் சிவா(வயது 21). இவரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த காசிநாடார் மகள் சவுமியா(வயது 21) என்பவரும் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர் பால் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை சவுமியா வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் பொன்னேரி பகுதியை சேர்ந்த சேகர்(21), செல்லப்பாண்டியன்(29) ஆகியோருடன் ஒரு காரில் சபரிநாதன் நாகர்கோவில் வந்து சவுமியா, சிவா, ஜெயராம் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சவுமியா, ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read More