கர்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு: குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்

Iodine Deficiency In Pregnant Women May Harm Babies கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இது பற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட ‘தி லான்செட்’ என்ற பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையில், மனித உருவாக்கத்தில் தைராய்டு சுரப்பிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள், அயோடின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பால், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற அயோடின் சத்து நிரம்பிய பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமே கர்ப்பிணித் தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அந்தப் பத்திரிகை தெளிவாக்குகின்றது. சமீபத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தினால், 324 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 263 மாவட்டங்களில்…

Read More