ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என தண்டிக்க முடியாது. உச்சநீதி மன்றம்.

A man having sex with a woman with her consent is not a Rape: SC 21மே2013:புதுதில்லி : ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என கூறி எவரையும் தண்டிக்க முடியாது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடல் உறவுக்கு பின், எதாவது காரணத்தினால் திருமணம் நின்றால், அது கற்பழிப்பு குற்றமாகாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. A man having sex with a woman with her consent is not a Rape: SC

Read More

விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை “பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன. அனுப்பப்பட்ட 45 எலிகள், 15…

Read More

பாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற…

Read More

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது

cricket player srishaanth cricket gambling life will come as a movie பிரபல கிரிக்கெட்  வீரர் “ஸ்ரீஷாந்த்” ஐ பி எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் , அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது, மற்றும் 7ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து “கிரிக்கெட்” என்ற பெயரில் மலயாளத்தில் திரைப்படம் தயாராக உள்ளது இப்படத்தினை மலையாள பட தயாரிப்பாளர் ஷாஜி கைலாஷ் ஏ கே சாஜன்  தயாரிக்க உள்ளனர் கதை வசனத்தை சாஜன் எழுதுகிறார். “ஸ்ரீஷாந்த்” கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை மைய்யமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது என கதைக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் ஒரு இளைஞன் ஆல் ரவுண்டராக விளையாட…

Read More

ஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்

AIADMK Politician car seized in dharmapuri 20 மே 2013 தர்மபுரி: ஜெ.பேரவை மாநில செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், அரசு விதிகளை மீறி, சுழல் விளக்கு பொருத்திய காரை பயன்படுத்தியதால் எஸ்.பி உத்தரவின் பேரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். எஸ்.பி.,ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் அதிவேகத்தில் தருமபுரி நான்கு சாலைகள் சந்திப்பில் சென்ற காரை பரிசோதனை செய்து பார்க்கும் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜெ.பேரவை மாநில செயலாளர்  டி.ஆர். அன்பழகன் சட்டவிரோதமாக சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அந்தஸ்தில் இருக்கும் டி.ஆர். அன்பழகன் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் எம்.துரை (39)…

Read More

சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை

Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங்,  மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு  நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில்,  தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh.

Read More

விஸ்வரூபம் திரைப்படம் : நீதிமன்றம் அவசர உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: ஏழை மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை

actor kamal hassan vishvaroopam high court order நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார். தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள…

Read More

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவத்தை சேர்ந்தவர் கைது.

ISI spy arrested in jaipur ஜெய்ப்பூர்.2013 மே 18: இந்திய ராணுவத்தில் எழுத்தர் வேலை செய்யும் அசாமை சார்ந்த சின்ஹா என்பவர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ எஸ் ஐ க்கு இந்திய ரகசியங்களை அனுப்பிய குற்றத்திற்காக காவல்துறை சிறப்பு உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் வேலையில் சேர்ந்து கடத்த பல ஆண்டுகளாக நமது நாட்டு இராணுவத்தின் முக்கிய ரகசியங்களை ஒரு நேபாளநாட்டு ஏஜென்ட் மூலமாக விற்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவனை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட அசாமை சார்ந்த சின்ஹா (வயது 43) என்பவர் 1995ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இந்திய ராணுவ எழுத்தர் வேலையில் சேர்ந்து 2000ம் ஆண்டு முதல் 2011 வரை சிலிகுரியில் உள்ள இந்திய ராணுவ கிடங்கில் தலைமை எழுத்தராக பணியாற்றி 2011ம் ஆண்டு ஜெய்பூர் க்கு மறுபடியும்  மாற்றலாகி வந்தவன். இவன் தன்னுடன்…

Read More

இலங்கை, 26 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க குர்ஷித் வலியுறுத்தல்

புதுடில்லி: இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான குர்ஷித், இலங்கை சிறையில் உள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அரசிடம், வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரிஸ் உடன் தொலைபேசியில் பேசினார். குர்ஷித் – பெய்ரிஸ் தொலைபேசி பேச்சு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் 2012ல் நவம்பரில், இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, ஐந்து இந்திய மீனவர்களை, போதை மருந்து கடத்தியதாக, கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதான வழக்குகளை முடித்து, விரைவாக விடுவிக்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்

Read More

சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை

சங்கராபுரம், 2013.மே.17-சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் முனிசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளும் அடைக்கப்பட்டன.  முனிசாமி சங்கராபுரம் பல்லவன் வங்கி சந்து பகுதியை சேர்ந்தவர். இவர் சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தற்சமயம் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வந்தார். மேலும் முனுசாமி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதியில் கேபிளும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முனிசாமி சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே கட்சி அலுவலக கட்டிடம் கட்டி வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் முனிசாமி கட்டிட பணியை பார்வையிட்டு கொண்டு இருந்தபோது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கினர். உடனே அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முனிசாமி ஓடினார், எனினும் அந்த கொலை கும்பல் முனிசாமியை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிசாமி தலை மற்றும்…

Read More