புதுடில்லி: இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான குர்ஷித், இலங்கை சிறையில் உள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அரசிடம், வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரிஸ் உடன் தொலைபேசியில் பேசினார்.
குர்ஷித் – பெய்ரிஸ் தொலைபேசி பேச்சு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் 2012ல் நவம்பரில், இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, ஐந்து இந்திய மீனவர்களை, போதை மருந்து கடத்தியதாக, கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதான வழக்குகளை முடித்து, விரைவாக விடுவிக்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்