வாஷிங்டன், ஆக. 5 – அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் செக்ஸ் குற்றதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார். அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது.
Read MoreAuthor: NR Sharavanan
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
modification in right to information act புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தொலை தொடர்புத் துறையில், 74 சதவீத அளவுக்கு உள்ள, அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக அதிகரிப்பது உட்பட, 12க்கும் மேற்பட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க, ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. “தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும்’ என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது, அரசியல் கட்சிகளுக்கு…
Read Moreஅசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்பு
Nearly 12000 women raped in Assam in 8 years கவுகாத்தி : அசாமில், கடந்த எட்டு ஆண்டுகளில், 12,000க்கும், மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 59 பேர் பலாத்கார கொலை : நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2005 முதல் 2013 மே வரையிலான, எட்டு ஆண்டுகளில், 12 ஆயிரத்து 857 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், 59 பேர் பலாத்காரத்திற்கு பின், கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாநில உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 8,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி, படிப்பின்மை போன்ற காரணங்களாலும், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க,…
Read Moreபிரதமர் மன்மோகன்சிங் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்
Prime minster Manmohan singh arrived Trichy புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார். Prime minster Manmohan singh arrived Trichy
Read Moreகெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!
‘Broom’ is Aam Aadmi Party’s election symbol வியாழன், 2 ஆகஸ்ட் 2013: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் துடைப்பம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடி பின் பிரிந்த அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கினார். சென்ற டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட அக்கட்சிக்கு தேர்தல் கமிஷனும் மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கியது. இச்சூழலில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கமிஷனிடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க துடைப்பம் சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நிறைந்துள்ள குப்பையை தம் கட்சியால் மட்டுமே துடைக்க முடியும் என்பதாலேயே…
Read Moreசேது சமுத்திர திட்டத்தால் தூத்துக்குடி வளர்ச்சி அடையாது: வை.கோ
No improvements can be made in Tuticorin implementing sethu canal: Vaiko தூத்துக்குடி : “”மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம்,” என, வைகோ தெரிவித்தார். தூத்துக்குடியில், ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, நான் முன்னிலையில் இருந்து செயல்பட்டேன். அப்போதைய சூழ்நிலைகள் வேறு. தற்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். கடல்வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச அளவிலான, பெரிய கப்பல்கள் வந்து செல்ல முடியாது. இத்திட்டத்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம். ஈழத்தமிழர் படுகொலையை திசை திருப்புவதற்காக, இப்பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இலங்கையில் “காமன்வெல்த்’ மாநாடு நடத்தக் கூடாது.…
Read Moreதேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை
Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’ புதுடெல்லி, ஆக.2-2013: தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதன்படி, இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டி உள்ளது. அதில், இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் கமிஷன் கேட்கும். மேலும், ‘இலவசம்’ என்பதற்கான அர்த்தத்தை வரையறுப்பது பற்றியும் கட்சிகளின் கருத்தை கேட்கும். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும். Election Commission calls all-party…
Read More65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்
65 indian fishermen arrested by srilankan Navy நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா புதன்கிழமை காலை தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் மேற்கொண்ட விசாரணையில், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த செ. இளமுருகனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சிலம்பரசன், விஜயபாலன், வீரைய்யன், கதிரவன், சக்திவேல், சிவராஜ் ஆகிய 6 பேர், அக்கரைப்பேட்டை கு. மதி என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற கு. மதி, கு. இளங்கோவன், இ. மதன், என். சிங்காரவேலு, வ. ஆறுமுகம், சி. இறைவன்,…
Read Moreநான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி
Actress Kanaka Is Alive தான் புற்று நோயால் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி என நடிகை கனகா பேட்டி அளித்துள்ளார். முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, இவர் நடித்த கரகாட்டக் காரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதையடுத்து ரஜினி, பிரபு, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த அவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக மாறியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாது இருந்த அவர் 200ம் ஆண்டில் தனது தனது தாய் இறந்த பின்பு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவின் ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. சமீபத்தில் மலையாள திரையுலகத்தின் பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில்…
Read Moreதெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்
separate Telangana state ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத்…
Read More