அஜித்தின் 'ஆரம்பம்' இணைய தளங்களில் வெளியாகியதால் அதிர்ச்சி!

actor ajith new film arambam movie scene Aarambam Video Leaked அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம்   என்பதினால்   ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், என்னுடைய படக்குழு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். மேலும் இது…

Read More

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட ஒரு வழி

diabetes quits in one month சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட…

Read More

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

rupee all time low of 61.80 against USD பெட்ரோல்,  தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரிப்பாலும் இறக்குமதியாளர்களின் டாலர் தேவையாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்று வர்த்தக முடிவில் டாலர் ஒன்றிற்கு ரூபாய் 60.88 ஆக இருந்தது. இன்று துவங்கியவுடன் 61.05 ஆக அதிகரித்தது. பின்னர் 61.51 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூலை 8ஆம் தேதி 61.21 ஆக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தாலே தவிர இறக்குமதிகளை குறைக்க வழியில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். English Summary: rupee all time low of 61.80 against USD After plunging to a record intra-day low of 61.80, the rupee rebounded sharply to…

Read More

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை

Nobel prize winner for peace, Tawakkul Karman Denied Entry Into Egypt   ஏமனை சேர்ந்த தவக்கோல் கம்ரான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முர்சிக்கு அவரது ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தவக்கோல் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க நேற்று எகிப்து வந்தார். தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. உடனே அவர் மற்றொரு விமானம் மூலம் ஏமனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு முர்சியின்…

Read More

சேரனின் மகள் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நீதிமன்றம் உத்தரவு

Tamil Cinema director cheran daughter news இயக்குநர் சேரன் மகள் தாமினியை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றின் தலைமையாசிரியர் பாதுகாப்பில் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரன் மகள் தாமினி காதல் பிரச்சனையால் வீட்டிலிருந்து வெளியேறி தன் காதலன் சந்துருவுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் தான் சந்துரு என்ற இளைஞரை காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் சந்துரு நல்லவர் இல்லை என்றும் தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என இந்த குற்றச்சாட்டினை சேரன் மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் காவல் துறையினர் தங்க வைத்தனர். இந்நிலையில்…

Read More

டெல்லி பல்கலைகழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட அவலம்

Women raped in Delhi university டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார். இந்நிலையில் இவரை சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திடீரென்று அப்பெண்ணை அடித்து தகாத முறையில் நடந்துக்கொண்டார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார் .மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள் முன்னாள் மாணவரை அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது. மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். Women raped…

Read More

கர்நாடக அரசியலில் குத்து ரம்யா என்கின்ற திவ்ய ஸ்பந்தனா

kuthu ramya entering karnataka politics நடிகர் நடிகைகள் அரசியல் நுழைவு இந்தியவில் தொடர்ந்து வரும் வரலாறு ஆகும் இந்த வரிசையில் இணையும் அடுத்த பிரபலம் நடிகை திவ்ய ஸ்பந்தனா என்கின்ற குத்து ரம்யா. கர்நாடகத்தின் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகை திவ்ய ஸ்பந்தனா போட்டியிட உள்ளார். பிரபல கன்னட நடிகையான திவ்ய ஸ்பந்தனா, இவர் கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியாவர்.இந்நிலையில் இவர் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த குமாரசாமியும், மாண்டியா எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நடிகை ரம்யா பெயரை முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ்…

Read More

வேஷ்டியால் ரயில் பயணம் ரத்து இந்தியருக்கு துபாயில் அவமானம்

Indian wearing dhoti not allowed on Dubai metro துபாயில் வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது வழக்கம். இந்நிலையில், 67 வயதான மதுமதியின் தந்தை நேற்று துபாயில் உள்ள எதிசலாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வேஷ்டி அணிந்து சென்றார். ரயில் நிலைய அதிகாரிகள், அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவருடன் சென்ற மதுமதி அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தடுப்பதற்கான காரணம் கேட்டபோது, அவர் வேஷ்டி அணிந்திருப்பதால் ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், வேஷ்டி, இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றும் சுற்றுலா பயணிகளுக்கு…

Read More

மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர்!

Sachin Tendulkar in Parliament புது தில்லி: ஆகஸ்ட் 06  2013: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு எம்.பி சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவையில் நேற்று கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால், அதில் சச்சின் டெண்டுல்கர் நேற்று கலந்து கொண்டார். அவை கூடுவதற்கு முன்பாகவே வந்த சச்சின், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து அவைக்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமருவதற்கு முன் சில எம்.பி.க்களுடன் கை குலுக்கினார். இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டு தெரிவித்தபோது, டெண்டுல்கர் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அமளி காரணமாக அவை 10 நிமிடங்கள்…

Read More

தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன் கைது

music director james vasanthan arrested நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். திரைப்பட இசையமைப்பாளாரான இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் உள்ள ராதா வேணுபிரசாத் (65) என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை  தன்னை  ஜேம்ஸ் வசந்தன்  தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது…

Read More