தமிழகம் முழுவதும் சாலை மறியல் ஆசிரியர்கள் கைது

Noon meal workers and teachers staged two different agitations in Tuticorin today தூத்துக்குடியில் கருப்பு உடையணிந்து தூத்துக்குடி-பாளை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 300க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டரீதியான ஓய்வூதியம் வழங்கிடவேண்டும், உணவுமான்ய செலவினை உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சமையல் உதவியாளர்களை சமையல் உதவியாளர்களாக பணிஉயர்வு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் இன்று சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினாவதி தலைமையில் கருப்பு உடையணிந்து வந்த சத்துணவு பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக புறப்பட்டு வந்தனர். அப்போது அவர்களை…

Read More

உடலுறுப்பு தானம் இந்த ஆண்டு 100-ஐக்கடந்து தமிழகம் சாதனை

This year, cadaver donations cross 100 mark in TN : cadaver transplant programme of Tamil Nadu   தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். இதுவும் சாதனையாகும். தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டுதான் தமிழகத்தில் உடல் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் 288 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். ஆனால்…

Read More

காற்றாலை இறக்கை கிழித்ததில் சிறுமி உள்பட 5 பெண்கள் பலி

A windmill fan which fell on a bus killed 5 women near Karur கரூர் அருகே காற்றாலை இறக்கை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி மீது நேற்று பஸ் மோதியதில், பஸ்சில் வந்த ஒரு சிறுமி உட்பட 5 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். 10 பேர் படுகாயடைந்தனர். திண்டுக்கல் மாவட் டம் பழனியில் இருந்து கரூருக்கு நேற்று ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த சாமிநாதன் (40) பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 55 பயணிகள் இருந்தனர். இதேபோல் தூத்துக்குடியில் இருந்து காற்றாலை மின் நிலையம் அமைக்க விசிறி இறக்கையை ஏற்றிக்கொண்டு ஒரு டிரெய்லர் லாரி மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கட்டாம்பட்டி பிரிவு ரோட்டில், டிரெய்லர் லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்துவதற்காக, இடதுபுறமாக திருப்பினார்.…

Read More

மோடி பிரதமராக நான் ஆதரிக்கிறேன் அன்னா ஹஸாரே

Anna Hazare ready to endorse Modi if he quits BJP நரேந்திர மோடி பாஜகவிலிருந்து விலகட்டும். அவர் பிரதமராக நான் முதல் ஆளாக ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் மோடியை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் அன்னா. எனது ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மோடிமுதலில் பாஜகவை விட்டு விலக வேண்டும் என்று பதிலளித்தாராம் அன்னா. அப்படி இல்லாவிட்டால் எனது ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினாராம். டெலவரே நகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்பி்ல் அன்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர் இந்தியர்கள். எனக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்ல. மோடி பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒரு அரசியல் கட்சி. எனவே என்னால் ஒரு கட்சியைச் சேர்ந்தவரை…

Read More

எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் தடுக்கப்படுகிறது.

specialty of lemon as food and medicine Glory of lemon எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர். இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது  என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது…

Read More

இந்தியாவின் சந்திரயான் -1 தகவல்களை உறுதி செய்தது நாசா!!

India’s Chandrayaan-1 helps NASA find water on moon இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள், தகவல்களை “நாசா’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சந்திரயான் -1 அனுப்பிய தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா, தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்காக சாத்தியங்களை உறுதி செய்துள்ளது. இதற்கு முன்,…

Read More

குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை

Man killed for opposing forcing of liquor down monkeys throat டெல்லியில் குரங்கிற்கு மது கொடுப்பதை தடுத்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டெல்லியில் ரயில் நிலையத்திற்கு அருகே இர்பான் என்னும் நபர் ஒருவர், அவரது குரங்குகளை வைத்து வித்தைக்காட்டி சம்பாதித்துவந்தார். இம்மாதம் 14 ஆம் தேதி இரவு, இர்பான் வீதியில் மது அருந்திக்கொண்டிருந்தப்போது, அங்கு ராம் பாபு என்னும் ஒரு நபர் வந்தார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராம் பாபு, இர்பானின் குரங்குகளுக்கு மதுவை கொடுக்க முயன்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த இர்பான் ராம் பாபுவை தடுக்க முயன்றப்போது, அவர் இர்பானின் தலையில் ஒரு செங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ராம் பாபுவை…

Read More

அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜி.கே மணி 15கட்சிகளுக்கு அழைப்பு

PMK Gk Mani against tamilnadu government தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்குமாறு பாமக தலைவர் ஜி.கே. மணி 15 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை. மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்திவிடலாம். பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது.…

Read More

சென்னையில் குழந்தை வைத்து பிச்சை எடுக்கும் அம்மாக்கள் அதிகரிப்பு

increasing beggars with children in chennai city இந்திய தலைநகர் டெல்லி போன்றே தமிழக தலைநகரில் அதிகரித்து வருகிறது குழந்தை வைத்து பிச்சை எடுப்பது ,சென்னை மாநகரின் சுற்றுப்புற மாநகரில் கை குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது, புறநகர் சென்னை மற்றும் வளர்ந்து வரும் சென்னை பகுதியான போரூர் பூந்தமல்லி ஆவடி தாம்பரம் கோயம்பேடு பேருந்து நிலையம் வடபழனி போன்ற நகர்ப்புறங்களில் கைக்குழந்தை வைத்து பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. புறநகர் பகுதியான இவ்விடங்களில் சாலையில் வண்டிகள் சிக்னலை எதிர்ப்பார்த்துநின்று கொண்டு இருக்கும் பொழுது குறிப்பாக கார்கள் பைக் மற்றும் லாரிகளை 4அல்லது 5மாத குழந்தையுடன் வந்து முற்றுகை இடுகின்றனர், அவர்களிடம் பணம் கேட்பது கொடுக்கவில்லை என்றால் குழந்தையை அழவைத்து பணம் கேட்பது என அந்த குழந்தயை மழை வெயில் பாராமல் போக்குவரத்து புகையில் கொடுமை படுத்துகின்றனர். மனம்…

Read More

பசுமை வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலித்த அறிவிப்பு

TN announces larger green houses for weavers பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கட்டப்பட உள்ள வீடுகளின் பரப்பளவை 365 சதுர அடியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமது தலைமையில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். கூட்டத்தில், பெரும்பாலான நெசவாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தறிகளை வைத்துத் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் 300 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் போதாது என்றும் நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர குறைந்தபட்சம் 365 சதுர அடி தேவை என்று எடுத்துரைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவாதத்துக்குப் பிறகு, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 365 சதுர அடியில் வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு…

Read More