காசாளர் பழனிசாமி உடலை மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலதிபர் மார்ட்டின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமி மர்மமான முறையில் காரமடை அருகே உள்ள குட்டையில் கடந்த 3-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். காசாளர் பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த 5 ம் தேதி கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் ஆய்வுக் கூறு நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நீதிபதி ராமதாஸ் நடத்திய விசாரணையில் உடல் கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இல்லாததால், மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

Related posts