ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை- மத்திய அரசு

டெல்லி:இந்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். டிசம்பர் 14-ந் தேதி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முறைகேடு எதுவும் இல்லை என கூறி தள்ளுபடி செய்தது.பிறகு பத்திரிகை ஒன்றில் வெளியான ரஃபேல் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் அவகாசம் அளித்தது .முடிவெடுத்தல், விலை நிர்ணயித்தல், இந்திய பங்குதாரரை தேர்வு செய்தல் இவைகளில் தலையிட முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அல்லது சிபிஐ விசாரணைக்கு இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்
இதையும் படியுங்கள்

← முந்தைய செய்தி: காசாளர் பழனிசாமி உடலை மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: விதிமீறி கட்டப்பட்ட பில்ரோத் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

Related posts