Champions League Twenty 20 cricket tournament beginning in Sep 21 சாம்பியன்ஸ் லீக் 2020 தொடர் வருகிற 21ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் ஐபிஎல் 6வது சீசனில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் ஹீட், பெர்த் ஸ்காச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத், பைசலாபாத், கன்டுரட்டா, டேகோ ஆகிய 4 அணிகள் தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 17ம்தேதி முதல் 20ம்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் 2…
Read MoreAuthor: NR Sharavanan
கென்யாவில் போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை
Severed head, hands sent as warning to Kenyan police கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம், மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள்…
Read Moreதீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை
excellent plan and effort involved in yasin arrest இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது. பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர். அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில்…
Read Moreபொறியியல் மாணவியின் விசித்திர நோய்:மருத்துவமனையில் அனுமதி
unknown disease for a thiruvarur engineering college student தமிழ்நாட்டில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா(21). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார். இறுதியாண்டு படித்த போது கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில் 50 கிலோ எடையிருந்த நிவேதிதா 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். நிவேதிதாவின் குடும்பம் ஏழ்மையில் வாடுவதால் அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர், மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு…
Read Moreஅரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களே மருத்துவர்கள்
sweepers and nurses are the doctors in government hospital maharashtra இந்தியாவில் சாதனைகள் ஒருபுறம் வளர்ந்தாலும் யாருக்கும் தெரியாமலும் வெளியில் வராமலும் பல அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மகாராஷ்டிராவில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை. மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. sweepers and nurses are the doctors in government hospital maharashtra Government hospitals run by…
Read Moreகல்யாண பரிசாய் தமிழக முதல்வர் சொன்ன குட்டி கதை
தமிழக முதல்வர் இப்பொழுதெல்லாம் எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஒரு கதையை சொல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு – பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை: புலியாக மாறினாலும் பயம் “சிலர்…
Read Moreநம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகள்: முதலமைச்சர்..
Motivational stories by tamilnadu chief Minister Jayalalithaa in the marriage of Housing Minister R Vaithilingam’s son Prabhu and AIADMK’s Madurai North MLA, AK Bose’s son KP Sivasubramanian’s wedding சென்னை, ஆக.31 – அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மதுரை எம்.எல்.ஏ. பி.கே.போஸ் இல்லத்திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஜெயலலிதா பரஸ்பரம் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு இரண்டு குட்டி கதைகளை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.…
Read Moreமாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம்.
Marriages redefined: Sanitary facilities part of contract மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம் நடக்கும் என்ற நிலையாகிவிட்டது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் ஆவது என்பது பழமொழி. திருமணம் என்பதை கழிவறையை வைத்து நிச்சயம் செய்வது என்பது மத்திய பிரதேச மொழி. மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று போட்டோ எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற…
Read Moreஅரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்??.
Madras HC has ordered to probe into the sex scandal of Puducherry aurobindo ashram அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில், அதுகுறித்து ஓய்வுபெற்ற கேரள நீதிபதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆசிரம வாசிகள் துணை ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு தடை கோரி ஆசிரம நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ்தாஸ் குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறதா, ஆசிரம நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற கேரள…
Read Moreஇது கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க!: கங்குலி
I can only laugh at that, said former captain Ganguly on Eng players urinating on the London Oval pitch இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிட்ச்சில் சிறுநீர் கழித்த விவகாரத்தை படித்து விட்டு சிரித்தேன் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதை இங்கிலாந்து வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து கொண்டாடினர். அப்போது ஜாலியாக இருந்ததுடன், பிட்ச் மேலேயே சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்தினர், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், இங்கிலாந்து வீரர்களின் செயலை படித்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்காக தண்டனையெல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. எச்சரித்தோ அல்லது அபராதம் விதித்தோ விட்டு விட வேண்டியதுதான், வேறு என்ன செய்ய முடியும். அவர்கள் முதிர்ச்சியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள் கிடையாது.…
Read More