செப்.21ல் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Champions League Twenty 20 cricket tournament beginning   in Sep 21

Champions League Twenty 20 cricket tournament beginning   in Sep 21
Champions League Twenty 20 cricket tournament beginning in Sep 21

சாம்பியன்ஸ் லீக் 2020 தொடர் வருகிற 21ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் ஐபிஎல் 6வது சீசனில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் ஹீட், பெர்த் ஸ்காச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத், பைசலாபாத், கன்டுரட்டா, டேகோ ஆகிய 4 அணிகள் தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 17ம்தேதி முதல் 20ம்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். பிரதான சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஏ பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதி சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதி சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. 21ம்தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் மும்பைராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் டிராவிட்டும் ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்.

English summary

Sachin Tendulkar, who announced his retirement from the Indian Premier League after his side clinched their maiden IPL title in 2013, is likely to play the upcoming Champions League Twenty 20 tournament.The teams announced their squads for the upcoming tournament on Friday on the Champions League T20. Rahul Dravid’s name was also present in the Rajasthan Royals squad and the Champions League could be the last T20 tournament for ‘The Wall’ before he announces his retirement from all forms of cricket.

The Mumbai Indians squad however didn’t have Ricky Ponting who had captained the side in the first few matches of the 2013 season.Champions League T20 is scheduled to be played from September 17 to October 6 and will feature ten teams that will be placed in two groups.While eight teams have already qualified for the Group Stage of the tournament, two teams will advance after the qualifiers.

 Champions League Twenty 20 cricket tournament beginning   in Sep 21

Related posts