Malaysia, Inmarsat release satellite raw data on missing MH370 மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு…
Read More மாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் பறந்து சென்ற பாதையை பற்றி புதிய தகவல்Category: உலகம் சிறகுகள்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…
Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…
Read More ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்
This Is How Much The Most Expensive Divorce In History Costs முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள். இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த…
Read More சுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்கொலம்பியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது 32 குழந்தைகள் பலி
32 children die in Colombia bus fire கொலம்பியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதில் பயணம் செய்த 32 குழந்தைகள் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகரான பகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அங்கிருந்த தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அங்கிருந்து…
Read More கொலம்பியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது 32 குழந்தைகள் பலிலாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் சாவு
An Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed on Saturday in a forested area of the Southeast Asian country, killing the defence minister and at least 16 other people. லாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் பலி லாவோஸ் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உள்பட16 பேர் இறந்தனர். இது பற்றி அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:- லாவோஸ் நாட்டுக்கு சொந்தமான ஏ.என்.74-300 எனும் வகை ராணுவ விமானம், வடக்கு பகுதியான ஷியாங் குவாங் எனும் மாகாணத்தில் நொறுங்கி விழுந்ததில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட…
Read More லாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் சாவுஉலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் கட்டப்பட்டுள்ளது
World’s “most environmentally-friendly office building” opens in Norway இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா தயாரிச்சி மத்த பில்டிங்குக்கும் கொடுக்குதாம். இதுல வெறும் சோலார் தகடு மட்டுமல்லா – சூடு – குளிர் தாங்கும் வண்ணம் இதன் கட்டமைப்பு மிக மாறுதாலாக புது டெக்னாலஜியை வைத்து கட்டியிருப்பதால் இதன் தற்போதைய…
Read More உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் கட்டப்பட்டுள்ளதுதுருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 200 பேர் பலி
Death toll in Turkish mine blast rises above 200, many still trapped மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு…
Read More துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 200 பேர் பலிதுபாயில் சாலை விபத்து : இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
10 Indians killed in a Road Accident at Dubai துபாய் : துபாயில் நடைபெற்ற ஓர் கோரமான சாலை விபத்தில், இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் துபாயில், இந்திய தொழிலாளர்கள் ஏராளமான பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த, தொழிலாளர்கள் 27 பேர் , கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு, சிறிய பேருந்தில் பயணம் செய்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த உழவு வாகனம் (டிராக்டர்) மீது, கட்டுமான தொழிலாளர்கள் சென்ற பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், தொழிலாளர்கள் 15 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களில்10 பேர் இந்தியர்கள் குறிப்பாக எல்லோரும், பீகார் மாநிலத்தை…
Read More துபாயில் சாலை விபத்து : இந்தியாவைச்சார்ந்த 10 தொழிலாளர்கள் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலிஇன்று அன்னையர் தினம்
Happy Mothers Day இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் சிறகுகள் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும். விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக்…
Read More இன்று அன்னையர் தினம்இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்
Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் 10 இலங்கை தமிழ் அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர். 2 குடும்பங்களை சேர்ந்த 10 இலங்கை அகதிகள் இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, ”இலங்கை ராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல், சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர். மேலும் இலங்கையில், விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை ராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்றனர். Sri Lankan refuges of 2 families arrived to Dhanushkodi today. They say, more than 2 thousand…
Read More இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் மீண்டும் தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள்