தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து

Hundreds Remain Missing After South Korean Ferry Sinks   தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான படகில் பள்ளி மாணவர்கள் 325 பேர் இருந்தனர். ஜிஜீ தீவுகளுக்கு தென் பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. இதனையடுத்து படகில் இருந்து உதவி கோரப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் சென்றனர். கப்பல் நீரில் மூழ்கியதில் 2 பேர் பலியாகினர். 180 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் 16 ஹெலிகாப்டர்கள், 34 மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Hundreds Remain Missing After South Korean Ferry Sinks About 160 passengers, including…

Read More

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..

Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…

Read More

மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பயனிக்கும் அதிநவீன கார்

உலகில் அதிவேக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினர் இக்காரை வடி வமைத்துள்ளனர். அதில், விண்வெளி, ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 என்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் கலக்கப்பட்டுள்ளன. ‘சூப்பர் கானிக்’ என்றழைக்கப்படும் அதிவேக கார் தயாரிக்கும் பணி கடந்த 2008–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது இப்பணி முடிவடைந்து விட்டது. அது சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும். இக்காரை விங் கமாண்டர் ஆன்டிகிரீன் இயக்குகிறார். இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் கார் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2016–ம்…

Read More

ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார நாள்

World Health Day celebrated தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்லும் திறன் படைத்த ஒன்றாய்தான் இருக்கின்றது மனித குலம். அந்த வகையில் மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் அமைப்பான உலக சுகதார அமைப்பின் சார்பில் இன்று “உலக சுகாதார தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.  ஒருங்கிணைப்பு பணி: இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஜெனிவா அமைப்பு: இந்நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. நோய்களை விரட்டுங்கள்; இதன் முக்கிய வேலையானது “தொற்றுநோய்கள்” போன்ற நோய், நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில்…

Read More

பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறை

9 month old booked for attempted murder in Pakistan   மின்சாரம் வேண்டி நடந்த போராட்டத்தில் பெற்றோருடன் வந்திருந்த 9 மாத குழந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் பாகிஸ்தான் போலீசார். இந்த விநோதமான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது யாசீன் தங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப் படாததைக் கண்டித்து தனது குடும்பத்தினர் உட்பட் 25 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதில் காயமடைந்த காவலர்கள் தங்களைத் தாக்கியதாக போராட்டம் நடத்திய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், போராட்டம் நடத்திய யாசீனின் ஒன்பது மாத பேரன் தன்னைத் தாக்கியதாக,…

Read More

மார்ச் 24 சர்வதேச காச நோய் நாள்

Today is World TB Day அனைத்துலக காச நோய் நாள் மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.   மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய்…

Read More

மார்ச் 23 உலக வானிலை தினம்

World Meteorological Day வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர்,வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. வானிலை மாறுபடுவதால்…: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது. காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.…

Read More

மார்ச்-21 உலக வன தினம்

 World Forestry Day – 21st March பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.   மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக்…

Read More

மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது

World House Sparrow Day – March 20 அழிவின் விளிம்பில் இருந்து வரும் சிட்டுக்குருவிகன் இனத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக…

Read More

அழுது கொண்டிருந்த குழந்தையின் மூக்கை கடித்த தந்தை

California teen father arrested for biting nose off infant அமெரிக்காவில் அழுது கொண்டிருந்த மகனை அடக்கத் துப்பில்லாத ஒரு அப்பா, மகனுடைய மூக்கை கடுமையாக கடித்து விட்டார். இதனால் அந்தக் குழந்தையின் மூக்கில் கடும் காயம் ஏற்பட்டு எலும்பும் முறிந்து விட்டது. அந்த அப்பாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் குழந்தையின் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாம். மூக்கும் பாதி அளவுக்கு துண்டிக்கப்பட்டு விட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தையைச் சேர்த்துள்ளனர்.  பேர்பீல்ட் என்ற இடத்தில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த தந்தையின் பெயர் ஜோஷுவா கூப்பர். இவருக்கு 18 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே தந்தையாகி விட்டார். இவரது குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. சம்பவத்தன்று கூப்பர் தனது வீட்டில்…

Read More