அழுது கொண்டிருந்த குழந்தையின் மூக்கை கடித்த தந்தை

California teen father arrested for biting nose off infant

California teen father arrested for biting nose off infant

அமெரிக்காவில் அழுது கொண்டிருந்த மகனை அடக்கத் துப்பில்லாத ஒரு அப்பா, மகனுடைய மூக்கை கடுமையாக கடித்து விட்டார். இதனால் அந்தக் குழந்தையின் மூக்கில் கடும் காயம் ஏற்பட்டு எலும்பும் முறிந்து விட்டது. அந்த அப்பாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் குழந்தையின் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாம். மூக்கும் பாதி அளவுக்கு துண்டிக்கப்பட்டு விட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தையைச் சேர்த்துள்ளனர்.  பேர்பீல்ட் என்ற இடத்தில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த தந்தையின் பெயர் ஜோஷுவா கூப்பர். இவருக்கு 18 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே தந்தையாகி விட்டார். இவரது குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. சம்பவத்தன்று கூப்பர் தனது வீட்டில் மகனுடன் இருந்தார். அப்போது குழந்தை வீறிட்டழுதுள்ளது. இதைப் பார்த்த கூப்பர் மகனை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை, அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாத அவர் கோபமடைந்து, குழந்தையைத் தூக்கி மூக்கைப் பலமாக கடித்துள்ளார். இதனால் மேலும் குழந்தை வீறிட்டழுதது. குழந்தையின் அழுகைச் சத்தம் பலமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் என்னவென்று பார்க்க வந்தனர். நடந்தைதப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் கூப்பரைக் கைது செய்தனர். குழந்தையை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கடித்த அதிர்ச்சியால் குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மண்டை ஓட்டிலும், மூக்கின் எலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூக்கும் பாதி துண்டிக்கப்பட்டுள்ளதாம். கூப்பரின் செயலால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாக கூப்பர் நடந்து கொண்டார் என்றே தெரியவில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். கூப்பரின் செயலைப் பார்த்து எனக்கு இதயமே வெ்டிப்பது போல ஆகி விட்டது என்றார் கூப்பரின் செயலை முதலில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கு பாதி துண்டிக்கப்பட்ட நிலையில் படுக்கை அறையில் கிடந்தது. போலீஸாரும் நடந்ததை அறிந்தும், குழந்தையைப் பார்த்தும் பெரும் அதிர்ச்சி அடைந்து விட்டனராம்.

California teen father arrested for biting nose off infant

Joshua Cooper, a teen father in Northern California, is under arrest after police say he bit the nose off his 1-month-old son because he was frustrated with the infant’s crying.  Fairfield police say Cooper, 18, was being held Friday in the Solano County Jail on suspicion of child cruelty and aggravated mayhem.  Police say they received a call Thursday by a distraught woman who said her baby was bleeding from his nose.  Doctors later determined the child suffered a skull fracture, a brain hemorrhage and that one third of the child’s nose had been severed.  The child is in stable condition at Oakland Children’s Hospital.  Police say they are still trying to determine how the skull fracture and brain hemorrhage occurred.

Related posts