விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கில் விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரிக்கு அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம்

மோட்டார் விபத்து தீர்ப்பாயம்

சென்னை:திண்டிவனத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ பள்ளி வாகனம் ஏறி பலியானார்.பள்ளி வாகனம் ஏறி பலியான சிறுமிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தாய் அஞ்சலி தேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இழப்பீடு தொகை தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையாக தலா 10 ஆயிரம் விதிக்கப்பட்டது.

Read More விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கில் விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரிக்கு அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் எஸ்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த குழு கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தது.ஆய்வு செய்த பிறகு குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.பிறகு கல்லூரி நிர்வாகம் அறிக்கையை கொடுத்தது. அறிக்கை தெளிவாக இல்லை என கூறி எம்.இ பட்ட மேற்படிப்புக்கு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது.மேலும் பி.இ இயந்திரவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது என கூறி கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Read More தனியார் கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது – சென்னை உயர்நீதிமன்றம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் பாலமுருகன் அ.ம.மு.க ( கடலூர் மாவட்ட செயலாளர்) மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் , திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணம் போக்குவரத்து இடையூறு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்று மனுதாரர் தரப்பு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Read More ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை:சட்ட விரோத பேனர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த தவறிவிட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read More சட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு

திண்டுக்கல்: திருவண்ணாமலையில் மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) காவலராக பணியாற்றுகிறார். அவர் தனது தங்கையின் தோழி சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றார்.திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனோஜ்குமார் மனு அளித்தார். இதனால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் – சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினர்.பெண் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் தியாகு இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் தியாகுவை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தியாகுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வசந்தியை கைது செய்து, சஸ்பெண்ட்…

Read More வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு

நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Read More நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்தனர். அதில் பாலசுப்ரமணியன் மற்றும் கணேசன் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பிறகு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சுப்பிரமணியனை துணைவேந்தராக நியமிக்க உத்தரவிட்டனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் , முறையான தேர்வு நடத்தி தகுதியான துணைவேந்தரை நியமனம் செய்ய கோரி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அண்மையில் நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Read More தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய சர்ச்சையால் முன் ஜாமின் கோரிய இயக்குநர் பா.ரஞ்சித்

மதுரை : நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக ஜூன் மாதம் 5-ம் தேதி உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.அவர் ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று,ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் காவல்நிலைய போலீஸ் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Read More ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய சர்ச்சையால் முன் ஜாமின் கோரிய இயக்குநர் பா.ரஞ்சித்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லாமல் விலகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அதில் மூன்று அப்பாவி பொதுமக்கள் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரிக்க தனக்கு விருப்பமில்லை என நீதிபதி சசிதரன் கூறி விலகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க வேறு நீதிபதி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Read More ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லாமல் விலகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பொதுக்கூட்டத்திக்கு அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சீர்காழி பேருந்து நிலையத்தில் நாளை வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் வடஇந்தியர்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த தடைவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த ஆனந்த் வெங்கடேஷ் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்த பொதுக்கூட்டத்தைக்கும் அனுமதி வழங்க முடியாது என கண்டனம் தெரிவித்தார்.வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தார்.விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பொதுக்கூட்டத்திக்கு அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்