தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும் மற்றும் இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் அமைவது குறித்து விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்தார்.அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Read More

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை டெல்லி :அதிமுக கொறடா ராஜேந்திரன், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

டெல்லி : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Read More

ஜோதிமணி,செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!

ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்! கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.

சென்னை:கரூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர்  செந்தில் பாலாஜியுடன்  மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது இரவு 12 மணிக்கு மேல்  தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாக புகார் அளித்தார் .அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  செந்தில் பாலாஜி மற்றும்  ஜோதிமணி  கைது செய்யப்படாமல் இருக்க வழக்கறிஞர் செந்தில்குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ,வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை முன் ஜாமீன் வழக்கினார்.

Read More

சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உயர்நீதிமன்றத்தில் மனு

சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உத்தரவிட மனு. மதுரை:மதுரை மாவட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கிய இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் .அதே போல் வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் செடிகள் நட வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடக்கிறது. தமிழ்நாடு சாலைவிபத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் விபத்துகள் நடக்கிறது.வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் படங்களை தடைசெய்தாலே 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த மனு சம்மந்தமாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.இந்த விசாரணையை ஏப்ரல் மாதம் 23-ம் தேதிக்கு(இன்று) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மதுரை:மதுரை மாவட்டம் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கிய இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு வேண்டும் .அதே போல் வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் செடிகள் நட வேண்டும். ஆனால் இதுபோன்ற பணிகள் நடப்பதில்லை.இதனால் விபத்துகள் தற்போது அதிக அளவில் நடக்கிறது. தமிழ்நாடு சாலைவிபத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் விபத்துகள் நடக்கிறது.வாகனங்களில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் படங்களை தடைசெய்தாலே 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த மனு சம்மந்தமாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.இந்த…

Read More

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம் புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.இறுதியாக தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும்…

Read More

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய…

Read More

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்திருந்தது.உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு தூக்குத்தண்டனை என்பதால் மனுவை ஏற்று கொண்டோம் என்றனர் .அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரியா என்று கேட்டு , தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.இந்த தூக்கு தஷ்வந்திக்கு தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

டெல்லி:கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி…

Read More

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை: சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடா்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள் .இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள், நில உரிமையாளா்கள் என சுமாா் 50 போ் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது , இந்த தீர்ப்பில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உடைமையாளா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரங்களில் சரி செய்து நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு விடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு!

சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு! சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி - எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.

சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம்…

Read More

குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அதற்கு உடந்தையாக இருந்த தாய்

குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அதற்கு உடந்தையாக இருந்த தாய் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின் அம்மாவுக்கும் இளைஞர்கள் சிவா மற்றும் மணியிடம் நட்பு இருந்துவந்துள்ளது. ஆந்திராவில் இளைஞர்களுடன் தங்கியிருந்த போது அந்தப் தாயின் அனுமதியோடு 3 வயது குழந்தையை சிவா மற்றும் மணி பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மூன்று பேரையும் காவல்துறை கைது பிறகு சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று காவல்துறையில் கணவர் புகார் அளித்தார்.பிறகு சில நாள்கள் கழித்து உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறி மனைவி குழந்தையுடன் வீடு திரும்பினார்.குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது .அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதை தம்பதியிடம் தெரிவித்தார்.இதை கேட்டு தந்தையும் அதிர்ச்சி அடைந்தார் .தாயிடம் மருத்துவர் என்ன நடந்தது என்று கேட்டபோது உண்மையை மறைத்து பிறகு ஒப்புக்கொண்டார் . சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் குழந்தையின்…

Read More