One third of food wasted, costs world economy $750 bn: UN
ஒவ்வொரு ஆண்டும் மூன்றில் ஒரு பங்கு உணவு பொருட்கள் வீணாக போவதால், உலகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 87 கோடி பேர் பட்டினியால் பாதிக்கபடுவதாக ஐ.நா.சபையின் விவசாய மற்றும் உணவு நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட அய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். அந்த ஆய்வின்படி, வருடந்தோறும் சுமார் 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறதாம். வீணாக்கப் படும் உணவுப் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பைத் தாண்டுகிறதாம். இந்த ஆய்வில், வீணாக்கப் படும் உணவுப் பொருட்கள் வரிசையில் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 28 சதவீத உணவு பொருட்கள் விவசாயத்தின் மூலம் விளைவிக்கப் பட்ட போதும், அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்கும் அளவிற்கு, குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் உணவுப் பொருட்கள் வீணாவதற்கு முக்கிய காரணமாக கண்டறியப் பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உணவைப் பாதுகாக்க போதிய வசதி இல்லாமல் வீணாவதும், அதற்கு நேர்மாறாக சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாங்கிய உணவு பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுவதும் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
One third of food wasted, costs world economy $750 bn: UN
One third of the food produced worldwide is wasted, costing the global economy around $750 billion a year, a new report by the UN food agency said today.The Rome-based Food and Agriculture Organisation (FAO) said some 1.3 billion tonnes of food are wasted every year, with the Asia region including China seen as the worst culprit.The food agency’s director general, Jose Graziano da Silva, told a press conference that in total, “one third of the food produced today is lost or wasted… equivalent to the Gross Domestic Production (GDP) of Switzerland.”