டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.தலா 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர்.ஆனால் கடந்த மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொது நல மனுவாக தாக்கல் செய்தது.அந்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் ,100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதையும் படியுங்கள்
- திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்
- ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை- மத்திய அரசு
- கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்

