சர்வதேச கண் மருத்துவ மருத்துவ விமானம் கொல்கத்தா வந்தது

Hi-tech flying hospital a hit in Kolkata

Hi-tech flying hospital a hit in Kolkata

 உலகில் உள்ள அனைத்து மக்களது கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை முற்றிலும் களைய போராடும் லாப நோக்கம் இல்லாத அரசு சாரா அமைப்பினுடைய விமானம் ஒன்று தற்போது கொல்கத்தா நகரை வந்தடைந்துள்ளது. ஆர்பிஸ் எனப்படும் சர்வதேச கண் மருத்துவ லாப நோக்கில்லாமல் அரசு சாரா அமைப்பு, கடந்த 1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச கண்மருத்துவ அமைப்பு வளரும் நாடுகளில் உள்ள மக்களின் கண் பார்வையை நீக்கும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இந்த மருத்துவ அமைப்பின் சிறப்பு அம்சமாக டிசி 10 ஜெட் விமானம் ஒன்றில் உயர் ரக தொழில் நுட்ப கருவிகள் கொண்ட ஒரு மருத்துவமனை இயங்குகின்றது. இதில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், தகவல் தொடர்பு மற்றும் தளவாட ஊழியர்கள், விமானப் பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு பணியாற்றுகின்றது. இந்த விமானத்திற்குள் ஒரு கண் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் கருத்தடை அறை, மீட்பு அறை மற்றும் 48 இருக்கைகள் கொண்ட வகுப்பறை ஆகிய வசதிகள் உண்டு. உலகம் முழுவதிலும் உள்ள 75 நாடுகளுக்கு பறந்து இந்த விமானம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர். தற்போது இந்த விமானம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதுவரை இங்கு 30 அறுவை சிகிச்சைகளும் அது குறித்த மருத்துவ வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. இம்முறை குறைந்தது 100 குழந்தைகளாவது இந்த பறக்கும் மருத்துவமனையில் அதிநவீன கண் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Hi-tech flying hospital a hit in Kolkata

Equipped with a state-of-the-art operation theatre, laser treatment and sterilization room, recovery room and a 48-seater classroom, the flying eye hospital – ORBIS DC-10 – landed at the Netaji Subhash Chandra Bose International Airport a week back. It has conducted 30 surgeries since then and has also been conducting classes for medical professionals. On Friday, little Shabana Khatoon and Laxmi Bauri underwent operation for crossed eye at the hospital. Over the next few days, ORBIS is likely to treat 40 more patients.

Related posts