சீனாவில் பால், ரொட்டி சாப்பிட்ட 180 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு

180 children fall sick after having meals at school in China

180 children fall sick after having meals at school in China

மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 180க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் பாலும், பிஸ்கெட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அந்தப் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தலைவலி, வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக அந்த குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 168 மாணவர்கள் குணமடைந்து வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் 12 பேர் மருத்துவமனை காண்காணிப்பில் உள்ளனர் என்று மாகாண அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் பிஸ்கெட்டுகளின் மாதிரிகள், மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு பால் காரணமாக இருக்கலாம் என்று மாகாண அரசின் ஆரம்பகட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆயினும், மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

180 children fall sick after having meals at school in China

At least 180 students fell ill after having milk and cookies at an elementary school in central China’s Hunan Province. Students from a school in Xinhua County were hospitalised after they reported having headaches, stomachache and vomiting in the last four days, state-run Xinhua news agency reported today. They have been sent to local hospitals for treatment. So far 168 students had been discharged from hospital, while 12 remain for further observation, the report quoted county government as saying. The milk and cookies supplied to the students have been sealed and samples have been sent to the provincial disease control and prevention centre for investigation, it said. According to the county government, preliminary investigation shows that milk might have caused the incident. Further investigation into the matter is underway.

Related posts