கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம் புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.இறுதியாக தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

Related posts