தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை:தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற முதல் தாள் ஜூன் 8-ம் தேதியும் மற்றும் இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது தேர்வு எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். கேள்வித்தாள் அமைவது குறித்து விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்தார்.அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts