ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய சர்ச்சையால் முன் ஜாமின் கோரிய இயக்குநர் பா.ரஞ்சித்

மதுரை : நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக ஜூன் மாதம் 5-ம் தேதி உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.அவர் ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று,ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் காவல்நிலைய போலீஸ் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related posts

One Thought to “ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய சர்ச்சையால் முன் ஜாமின் கோரிய இயக்குநர் பா.ரஞ்சித்”

  1. மாசிலா

    பிரம்மனின் காலில் இருந்த பிறந்த இழி நிலை (தே…யா) மக்களே சூத்திரகள் என்றும், இந்து மத சாதி அடுக்குகளின் கட்டுக்குள் வராத பறையர்கள் மற்றும் பள்ளர்கள் தீண்டப்படாதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், அடிமைகள், மிருகத்தைவிட கேவளமானவர்கள் என்று இந்து மத மநு சாத்திரத்தில் எழுதி அதை அமுல் படுத்தி கடைபிடிக்கும் இந்து மதம் சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சதி செய்யவில்லையா? இதற்கு காவல் துறை வழக்கு போடுமா?

Comments are closed.