டெல்லி: 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.பழைய ரூபாய் 1000, 500 ஆகிய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது மத்திய அரசு.மதுரையைச் சேர்ந்த ராமன் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார்.ஆனால் வங்கி மறுத்தது.இதனால் ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ராமன் மனு அனுப்பினார்.ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது .பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராமர். மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய்…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி…
Read Moreடெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.பிறகு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது.இதனால் எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்புள்ளது.டெல்லியில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிற்கு கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.அவர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்க வாய்ப்புள்ளது.
Read Moreமது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது
மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி எட்டு மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மாணவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
Read Moreஅட்டாக் பாண்டிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
மதுரை: 2013ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மதுரையில் கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.மேலும் மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி உள்ளார். இந்த வழக்கில் கடந்த 2019 மார்ச் 21ஆம் தேதி அட்டாக் பாண்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆயுள் தண்டனை வழங்கியது. அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உடல் நல பாதிப்பால் அறுவைச் சிகிச்சை செய்ய போகிறார். அறுவைச் சிகிச்சையின் போது உடனிருந்து கவனிக்க கணவருக்கு பரோல் அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரோல் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.ஆனால்…
Read Moreஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி…
Read Moreகொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்
சென்னை: கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோரின் வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த மூவருக்கும் திருநெல்வேலி நீதிமன்றம் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreநிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.கஜா புயலால் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்களும் நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதனால் உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பலர் போராடினார்கள் .போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஆனால் காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60…
Read Moreஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.
Read Moreமகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.
Read More