லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் வழக்கு விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக இருந்த முருகன் மீது பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஐ.ஜி. முருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்தார்.பெண் எஸ்.பி. தரப்பில் கேரளாவுக்கு மாற்ற தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றி 6 மாதத்தில் அறிக்கை தர அந்த மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது. தெலங்கானா மாநில டிஜிபி-க்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி, மூத்த பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts