முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் தண்டனை வழங்கும் சட்டத்திற்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி:முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக மசோதா நிறைவேறியது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன் படி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து சமஸ்தா கேரள ஜமாய்துல் உலமா, ஜமாத் உலமா இ ஹிண்டு ஆகிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Related posts