மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்

மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் “சகாப்தம்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த். அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும்…

Read More

மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?

  Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…

Read More

நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்

நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்   Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார். திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள்  திரு. V.…

Read More

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.சீதாராமன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் ஆர்,கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், மோகன் பியாரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளரானார். மறு உத்தரவு வரும்வரை, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மோகன் பியாரே முழு பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.…

Read More

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

one more dead steam pipeline explosion at nlc நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனளிக்காமல் சிவலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். விபத்தை தொடர்ந்து, அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அங்கு பணிப்புரியும் ஊழியர்கள் கோரிக்கை…

Read More

10ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ–மாணவிகள் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!

Like any other years, this year also girls have outnumbered boys in pass percentage in the SSLC exam. பத்தாம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 18 மாணவிகள், ஒரு மாணவர் என 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். 125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், 321 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவிகள் 93.6 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 69 ஆயிரத்து 810 பேர்…

Read More

மகாபலிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, நடிகர் நாசர் மகன் கவலைக்கிடம்

Actor Nasser’s son Faizal met with an accident while 3 out of 4 members who accompanied him in a car died. மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நடிகர் நாசர் மகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் நாசர் மகன் பைசல். இவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். பலியானவர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (23), சித்து (22) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பைசலுக்கு…

Read More

தேனியில் ஆலமரம் விழுந்து 5 பேர் உடல் நசுங்கி பலி

Tamil Nadu: Five die as tree falls near cremation ground பயணிகள் நிழற்குடை மீது ஆலமரம் சாய்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மழைக்காக ஒதுங்கிய தந்தை, மகன் உள்ளிட்ட 5 தொழிலாளர்களுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டியில் தனியார் திராட் சைத் தோட்டம் உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வீட்டுக்குப் புறப் பட்டனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஒரு டிராக் டரில் சென்ற நாராயணன் தேவன்பட்டியைச் சேர்ந்த சிங்கத் தேவர் (40), சுருளிபட்டியைச் சேர்ந்த குணசேகரன் (42), குன்னப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38), திருப் பாண்டி (58), அவரது மகன் ரமேஷ் (32)…

Read More

ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???

Former Central Minister G K Vasan Plans to starts a New political Party சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது…

Read More

பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..

DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை.. பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற…

Read More