பீகார் மாநிலத்தில் மகளின் காதலனை கண்களைத் தோண்டி கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த தந்தை

Police constable blinds and kills daughter’s lover மகளை ரகசியமாக சந்திக்க வந்த அவரது காதலரை போலீஸ் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமாரும், பாட்னா மாவட்டம் தவ்லத்பூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் அபய்குமார் என்பவரின் மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ராகுலுக்கு வேலை கிடைத்தது. இதனால், பணிக்காக ஹரித்துவார் செல்வதற்கு முன்னதாக காதலர்கள் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, காதலி வீட்டில் அனைவரும் தூங்கியதும் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராகுல். காதலர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை காதலியின் தந்தையான அபய்குமார் பார்த்து விட்டார்.…

Read More

சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து

Chennai Building Collapse: One Dead, 50 Feared Trapped சென்னையில் பெய்த திடீர் மழையில், போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். சென்னையில் இன்று மதியம் , திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு என சில மணி நேரத்தில் சென்னை அல்லோகலப்பட்டது. இடிந்த விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை, மீட்க கட்டட இடிபாடுகளில் உள்ள கம்பிகள் இடையூறாக கூறப்படுகிறது. இதனால் கம்பிகளை அகற்ற மீட்பு படையினர்…

Read More

டெல்லியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 4பேர் உயிரிழப்பு

Building collapses in North Delhi டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும், இதில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், 12 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள இன்டர்லோக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில், மூன்று அடுக்குக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சபடுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்க தீ அணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். தவிர 4 ஜே.சி.பி.க்கள் இடுபாடுகளை மீட்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம்…

Read More

8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயித்து சதனை

Star runner, 8 months pregnant, competes in 800 meters at U.S. championships கர்ப்பமாக இருந்த போதிலும் தளராமல் களத்தில் ஓடி 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க வீராங்கனை அல்சியா மோன்டானோ. பின்னாளில் தன்னுடைய குழந்தைக்கு சொல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை பாடத்தை இதன் மூலம் நடத்திக் காட்டியுள்ளார் அவர்.  இந்த அற்புதமான தருணத்தின் மூலம் தன்னுடைய குழந்தைக்கு தன்னம்பிக்கையின் அற்புதத்தையும் காட்டியுள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 34 வார கர்ப்ப வயிற்றுடன் கலந்து கொண்டார் அல்சியா. 5 முறை உலக சாம்பியனான இவர் தன்னுடைய ஓட்டத்தை 2 நிமிடங்கள் 32.13நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.  ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டில் மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 1:57:34மணிக்கூறுகளில் கடந்த இவர், இந்தமுறை தன்னுடைய முந்தைய சாதனையில் 35 நிமிடங்கள் தாமதமாக…

Read More

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் பீம்பெர்-காலி- காம்பீர் முன்னரங்க நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இருதரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் வீரர்களுக்கு படுகாயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த 17,18-ந் தேதிகளிலும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Read More

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

Two killed, one critically injured in fire accident near Sivakasi விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர். சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் மல்லி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான முன்னா என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. புதன்கிழமை மாலை இந்த பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அந்த அறையும் அடுத்தடுத்து உள்ள 8 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி 8 கட்டடங்களும் இடிந்து சேதமடைந்தன. விபத்து ஏற்பட்ட அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பிக் கொண்டிருந்த திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் (55), முனியசாமி (35) ஆகிய இருவரும் தூக்கி…

Read More

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சால் பதற்றம் போலீஸ் குவிப்பு

Is Idinthakarai on the edge of lawlessness? திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது 30-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார். பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்த பின்னரும் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடரும் மோதல் அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக அணுஉலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. மோதலின்போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்,…

Read More

மருத்துவமனையிலிருந்து குழந்தையை கடத்திசென்ற பெண்னை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

10-day-old baby goes missing in GRH, police trace it in five hours மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், நேற்று காலை 9 மணிக்கு கடத்தப்பட்ட பெண் குழந்தையை, ஐந்து மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். திருடிய பெண்ணையும், கணவரையும் கைது செய்தனர். விருதுநகர் வத்திராயிருப்பைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி,26. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஜூன் 10ல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. வலிப்பு நோய் இருந்ததால் வார்டில் சிகிச்சையில் உள்ளார். ராஜபாளையம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி முத்து, 28. இவருக்கு ஜூன் 10ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில், சிசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. வார்டில்…

Read More

மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்

மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் “சகாப்தம்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த். அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும்…

Read More

உலக அகதிகளின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியது ஐ.நா. தகவல்

World Refugee Day: More than 50 million people displaced உலகத்தின் எதாவது ஓர் இடத்தில ஒவ்வொரு நாளும் போர் நடந்துகொண்டே இருக்கிறது. போரின் கோரக் கரங்களிலிருந்து உயிர் பிழைக்க, குடும்பம் குடும்பமாக மக்கள் இடம்விட்டு இடம் செல்ல நேர்கிறது. ஒவ்வொரு நிமிடமும் எட்டுப் பேர் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வேற்றிடம் தஞ்சம் புகுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தகைய அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 2011-ம் ஆண்டு வரை உலகத்தில் அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர்…

Read More